நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கக்கூடாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி’’ என்ன நடக்கிறது என்பதை கர்நாடக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எம்.எல்.ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதத்தை உடனே ஏற்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. காங்கிரஸ் -மஜத கூட்டணி பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கக்கூடாது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் சுயமரியாதை இல்லாதவர்கள். கூட்டணி அரசை தொடர்ந்து நான் நடத்துவேனா? இல்லையா? என்பது குறித்து நான் இங்கு பேச வரவில்லை. ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விடவேண்டும் என எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

எத்தகைய சவால்களையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். பெரும்பான்மை இருக்கும் நிலையில் நம்பிக்கை வாக்கு நடத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது. எடியூரப்பா சட்டப்பேரவையில் விவாதம் நடத்த ஏன் பயப்படுகிறீர்கள்? 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய கர்நாடக மக்கள் விரும்புகின்றனர். 4 ஆண்டுகள் இருக்கையில் ஏன் எடியூரப்பா இவ்வளவு அவசரப்படுகிறார்? 12 எம்.எல்..ஏக்கள் மும்பையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் ரமேஷ்குமார் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வந்துள்ளேன். ’’ என அவர் தெரிவித்தார்.