காண்பவரை எல்லாம் கடித்த தெருநாய்கள்.. பிள்ளைகளை பாதுகாக்க எடுத்த அதிரடி முடிவு - கேரளாவில் புதிய பிரச்சனை!
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை கூத்தலி பஞ்சாயத்து பகுதியில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அன்று மாலை மட்டும் சுமார் ஐந்து பேர் தெரு நாய்களால் கடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொதுவாக குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் பல இடையூறுகள் ஏற்படும், ஆனால் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள கூத்தலி என்கின்ற இடத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் ஒரு புதிய வகை சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூத்தலி பஞ்சாயத்து பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் நாய்களுக்கு பயந்து அப்பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கும், 17 அங்கன்வாடிகளுக்கும் இன்று ஜூலை 10ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை கூத்தலி பஞ்சாயத்து பகுதியில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அன்று மாலை மட்டும் சுமார் ஐந்து பேர் தெரு நாய்களால் கடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து குழந்தைகள் வெளியில் சென்றால் அவர்களுக்கு விபரீதம் ஏதும் ஏற்படலாம் என்ற நிலையில் கூத்தலியில் உள்ள 7 பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளது.
சென்ற மாதம் ஒன்பது வயது சிறுவனை ஒரு தெரு நாய் கடித்து குறிப்பிடத்தக்கது, அதேபோல சில தினங்களுக்கு முன்பு ஒரு சிறுமையை மூன்று நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து, அந்த சிறுமியின் தலை, வயிறு தொடை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த ஆண்டில் கடந்த மே மாதம் வரை மட்டும் சுமார் 1.5லட்சம் தெரு நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளது.
ஏறத்தாழ 1000 பேர் இதில் படுகாயம் அடைந்துள்ளனர், ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 25,230 பேர் கேரளாவில் நாய்க்கடியால் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும் ஒரே மாதத்தில் 11 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் நாய்கடியால் இறந்துள்ளதும் பெரும் அச்சத்தை ஏற்பத்தியுள்ளது.
கடந்த ஆறு மாத காலத்தில் இதுவரை எட்டு பேர் தெருநாய் கடியால் மரணித்துள்ளனர். கேரளாவில் உள்ள விலங்குகள் நலத்துறை அளித்த தகவலின்படி கேரளாவில் சுமார் 2 லட்சத்து 89 ஆயிரத்து 988 தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
இன்ஸ்டாகிராம் மூலம் பல மாநிலங்களில் கடை விரித்த இளம் பெண்; 8 திருமணம் செய்ததாக குற்றச்சாட்டு