Metro : கர்நாடகாவில் நம்ம மெட்ரோவுக்கு வாரி வழங்கிய இன்போசிஸ்.! கோணப்பா ரயில் நிலையத்தில் இவ்வளவு வசதிகளா.?
கர்நாடாகவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், தற்போது மஞ்சள் வழித்தட பணிகள் முடிவடைந்து இந்தாண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள கோணப்பா அக்ரஹாரா நிலையம் அதி நவீன வசதியோடு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்- பெங்களூர் மக்கள் நிம்மதி
நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் மெட்ரோ ரயில் திட்டம் மிகப்பெரிய உதவியாக மக்களுக்கு உள்ளது. குறிப்பாக பெங்களூரில் தற்போதுள்ள மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாக அளவிற்கு சாலைகள் உள்ளது. இந்த நிலையில் தான் பெங்களூரில் நம்ம மெட்ரோ பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் அடுத்ததாக முக்கிய திட்டமான மஞ்சள் லைன் பணிகளை இந்த ஆண்டுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பெங்களூர் மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Aparna Vastarey : பெங்களூரு மெட்ரோ ரயில்களில் ஒலித்த குரலுக்கு சொந்தக்காரரான நடிகை அபர்ணா காலமானார்!
கோணப்பா அக்ரஹாரா ரயில் நிலையம்
புதிய மஞ்சள் லைனாது ஆர்வி ரோடு முதல் பும்பசந்திரா வரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மெட்ரோ டிரைவர் இல்லாமல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியின் தொழில்நுட்ப மையத்தில் உள்ள கோணப்பா அக்ரஹாரா நிலையமும் அதே பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்ஃபோசிஸ் வளாகத்திற்கு எளிதாக செல்லும் வகையில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் அமைக்க இன்ஃபோசிஸ் அறக்கட்டளை ரூ.115 கோடி வழங்கியுள்ளது. இதில், ரயில் நிலையம் அமைக்க ரூ.100 கோடியும், பிளாட்பார ஸ்கிரீன் கேட் அமைக்க ரூ.15 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோணப்பா அக்ரஹாரா- வசதிகள் என்ன தெரியுமா.?
கோணப்பா அக்ரஹாரா நிலையத்தில் பிரம்மாண்ட ஸ்கிரின், கலைநயத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையம் இந்திய பசுமைக் கட்டிடக் கவுன்சிலால் பசுமை ரயில் நிலையமாக அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ரயில் நிலையத்திற்கு மட்டும் தினமும் 20ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையம் மொத்தம் 10,185 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில், 3,000 சதுர அடி, இன்ஃபோசிஸ் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூரில் அதிக உயரம் கொண்ட பிளாட்பார்ம் ஸ்கிரீன் கேட்களைக் கொண்ட முதல் மெட்ரோ ரயில் நிலையமாகும். சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகளுக்காக ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. கோணப்ப அக்ரஹாரா ஸ்டேஷனில் இரண்டு அடி மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஓசூர் சாலையை பொதுமக்கள் கடக்கும் வகையிலும்,. மற்றொன்று இன்ஃபோசிஸ் வளாகத்திற்குள் செல்ல 372 மீட்டர் நீளமுள்ள இணைப்பு பாலமாக உருவாகியுள்ளது. இந்த நிலையத்தில் லிஃப்ட், எஸ்கலேட்டர்கள், நடைபாதைகள், கழிவறைகள், குடிநீர் போன்ற சிறந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்திற்கு இன்போசிஸ் பெயர்
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களை குறுகிய காலத்திற்கு வைப்பது தொடர்பாக ஒப்பந்தம் போடுவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மஞ்சள் வழித்தடத்தில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கோணப்ப அக்ரஹாரா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இன்ஃபோசிஸ் பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.