விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் மஹாராஷ்டிரா இளைஞர் ஒருவர் ஏடிஎம் மையத்தில் கார்டை சொருகினால், பணத்துக்கு பதிலாக கொழுக்கட்டை தரும் வகையில் புதிய எந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

புனே மாவட்டம், சஹாகர் நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குல்கர்னி ஏடிஎம் வடிவிலான கொழுக்கட்டை தரும் எந்திரத்தை உருவாக்கியுள்ளார். இந்த எந்திரத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏடிஎம் கார்டை எந்திரத்தில் செலுத்தினால், பணம் வருவதற்கு பதிலாக கொழுக்கட்டை வரும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏடிஎம் எந்திரத்துக்குள் சிறிய அளவிலான விநாயகர் சிலையையும் நிறுவியுள்ளார்.

இது குறித்து குல்கர்னி கூறுகையில், நமது கலாச்சாரத்தையும், தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாரர். குல்கர்னியின் இந்த முயற்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் கொழுக்கட்டை மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு பயன்படும் மற்ற பொருட்களுக்காகவும் இதுபோன்ற எந்திரங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டனர்.