koli married with anuska sharma

இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்துகொண்டார். 

கடந்த 2013ம் ஆண்டு ஷாம்பு விளம்பரம் ஒன்றில் இணைந்து நடிக்கும் போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் காதல் மலர்ந்தது. 

விராட் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை காண அனுஷ்கா ஷர்மா விளையாட்டு மைதானங்களுக்கு சென்று வந்தார். 

மேலும் பல இடங்களிலும் வெளிப்படையாகவே சுற்றி வந்தனர். இதனால் இவர்கள் காதல் குறித்து பரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து சில காலம் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியது. 

இந்நிலையில், கடந்த வாரமே இருவரும் இத்தாலியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. அதன்படி இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இதில், பாலிவுட் நடிகர் அமீர் கான் , ஷாருக் கான் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோர் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இத்தாலியில் உள்ள டஸ்கனி நகர விடுதியில் இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், அழைப்பிதழ் வைத்து இருப்பவர்கள் மட்டும் விடுதிக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. 

இதனிடையே விராட் கோலிக்கு இந்தியா- இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.