அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கியார் புயலாக உருமாறி இருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாகவும் தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதிதீவிர சின்னமாகவும் வலுபெற இருக்கிறது. இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும் ஓமன் கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் மும்பையில் இருந்து 380 கிலோமீட்டர் தொலைவில் இந்த புயல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடலோர மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய இருக்கிறது. தமிழகத்தில் கியார் புயலால் பாதிப்புகள் இருக்காது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்தது. இதனிடையே மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி ஆந்திரா நோக்கி நகர்ந்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மழையின் தீவிரம் தற்போது குறைந்து இருக்கிறது.

இதையும் படிங்க: பிகிலை தட்டித்தூக்கும் கைதி..! அட்லீயை வறுத்தெடுக்கும் விஜய் வெறியர்கள்..!