Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களை அவமானப்படுத்தி அநாகரிக பேச்சு... மனம் உருகி கிரண்பேடி வருத்தம்..!

தமிழக தண்ணீர் பிரச்சனை தொடர்பான தனது கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்துள்ளார் என மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Kiran Bedi regretted about tweet on Tamil Nadu... Rajnath
Author
Delhi, First Published Jul 4, 2019, 4:21 PM IST

தமிழக தண்ணீர் பிரச்சனை தொடர்பான தனது கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்துள்ளார் என மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

 Kiran Bedi regretted about tweet on Tamil Nadu... Rajnath

இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது என கிரண்பேடி விமர்சித்திருந்தார். மேலும் மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட இந்தப் பிரச்சனைக்கு காரணம் எனத் தெரிவித்திருந்தார். கிரண்பேடியின் இந்தக் கருத்துக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர். Kiran Bedi regretted about tweet on Tamil Nadu... Rajnath

இந்நிலையில், கிரண்பேடியின் கருத்து குறித்து மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அதற்கு அரசின் சார்பில் பதிலளித்த ராஜ்நாத் சிங், தமிழக மக்கள் பற்றி கூறிய கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக கூறினார். Kiran Bedi regretted about tweet on Tamil Nadu... Rajnath

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் மீது மரியாதை வைத்துள்திருக்கிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கருத்து பதிவிடவில்லை. எதிர்ப்பு எழுந்தவுடன் உடனடியாக அதனை நீக்கிவிட்டேன் என கிரண்பேடியின் கூறியதாக ராஜ்நாத் விளக்கமளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios