புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்று கிரண்பேடி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மேல்மறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் கிரண்பேடி தலையிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இது தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில்  ஜூன் 30-ம் தேதி விசாரணை தொடங்கி நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற மறுவிசாரணையின்போது மத்திய அரசு, கிரண் பேடியின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் எனவும், புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் கிரண்பேடி தலையிடக் கூடாது எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளது.