Killing in the name of cow worship is not acceptable says PM Modi
பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அப்பாவி மக்களை சில கும்பல்கள் கொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
மவுனம் கலைத்தார்
நாடுமுழுவதும் பசுப்பாதுகாப்பாளர்கள் முஸ்லிம்கள் மீதும், பசுக்களை கொண்டு செல்பவர்கள் மீது சமீபகாலமாக தாக்குதல்கள் நடத்தி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.
ஹரியானாவில் ரம்ஜான் பண்டிக்கைக ரெயிலில் வந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் அடித்துக்கொன்றது பெரியசர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இதுபோல் பல சம்பவங்கள் இதற்கு முன் தொடர்ந்து நடந்தன.

அவைகள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் காத்துவந்த பிரதமர் மோடி இப்போது பேசியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது
நூற்றாண்டு நிகழ்ச்சி
குஜராத் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
இதற்கிடையே ஆமதாபாத்தில் சபர்மதி நதிக்கரையில் அமைந்துள்ள சபர்மதி ஆஸ்ரமத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட காசுகள், தபால்தலைகளை வௌியிட்டார், மேலும், காந்தியின் குருவான மத் ராமசந்திரவின் தபால்தலையையும் வௌியிட்டார்.
அதன்பின் அங்கு நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது-
ஏற்க முடியாது
பசுக்ளை பாதுக்காகிறோம், ‘பசு பக்தி’ என்ற பெயரில் சில கும்பல்கள் சமீபகாலமாக அத்துமீறி செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பசுக்களை வழிபடுகறோம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதையும், கொலை செய்வதையும் ஏற்க முடியாது. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் மகாத்மா காந்தி ஏற்றுக்கொண்டதில்லை.
சட்டத்தை கையில் எடுக்காதீர்கள்
அதுமட்டுமல்லாமல், நாட்டில் உள்ள எந்த நபரும் சட்டத்தை தன் கையில் எடுத்து செயல்பட அனுமதி இல்லை, அவர்களுக்கு உரிமையும் இல்லை. அவ்வாறு சட்டத்தை கையில் எடுத்து அத்துமீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏன் மறந்தோம்?
இந்த நாடு அஹிம்சை போதித்த நாடு. இது மகாத்மாகாந்தி பிறந்த பூமி. இதை மறந்து விட்டு ஏன் இப்படி செயல்படுகிறோம். இந்த சமூகத்தில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை. வன்முறையின் மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.
காந்தி ஏற்க மாட்டார்
இந்த நாட்டில் பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மகாத்மாகாந்தியைக் காட்டிலும், ஆச்சார்யா வினோபாவேக் காட்டிலும் நாம் பசுக்களை பாதுகாத்து இருக்க முடியாது.
பசுக்களை பாதுகாப்பதற்காக அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்வதை மகாத்மா காந்தி ஒருபோதும் ஏற்க மாட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
