Asianet News TamilAsianet News Tamil

மருத்துவர் சீட்டின்றி ஆன்டிபயாடிக்ஸ் மருந்து விற்றால் மருந்துக் கடை உரிமம் ரத்து:கேரள அரசு அதிரடி

மருத்துவரின் மருந்துச்சீட்டு இல்லாமல்  வருவோருக்கு ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள், மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்துக் கடைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.

Kerala will revoke the licences of pharmacies that sell antibiotics without a prescription.
Author
First Published Dec 22, 2022, 2:26 PM IST

மருத்துவரின் மருந்துச்சீட்டு இல்லாமல்  வருவோருக்கு ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள், மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்துக் கடைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் நுண்ணுயிர் எதிர்ப்பு (ஏஎம்ஆர்) செயல்பாடுகளை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் ஆன்டிபயாடிக் ஸ்மார்ட் ஆரம்ப சுகாதார நிலையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காய்ச்சல்,தொண்டை வலியை லேசா நினைக்காதீங்க:கேரள மக்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை

 உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் காலப்போக்கில் மாறும்போது, நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பது கடினமாகிறது. மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை, இதனால்,  நோய் பரவல், கடுமையான நோய் மற்றும் இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.

மருந்துகளை எதிர்க்கும் திறனால், ஆன்டிபயாடிக்ஸ் உள்ளிட்ட பிற ஆன்டிமைக்ரோபயல் மருந்துகள் செயலிழந்து, அதன்மூம் நோய் தொற்றுஅதிகமாகி சிகிச்சையளிக்க இயலாததாகிவிடுகிறது

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கையில் “ நோய் எதிர்ப்புச் சக்தியை கிருமிகள், வைரஸ்கள் எதிர்க்கும் சக்தி ஏற்படவும், ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் செயலிழந்து போகவும், மருத்துவர்கள் மருந்துச்சீட்டு இல்லாமல் மக்கள் மருந்துக் கடைகளில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் வாங்கி சாப்பிடுவது முக்கியக் காரணம்.

பிளான் பண்ணிடிங்க! பிரதமர் கோவிட் மீட்டிங் எதுக்குணு புரிஞ்சிருச்சு! காங்கிரஸ் கிண்டல்

ஆதலால், இந்த நடவடிக்கையை முற்றிலுமாகத் தடுக்க கண்டிப்பான நடவடிக்கைகளை மத்தியஅரசு எடுக்க இருக்கிறது. மருத்துவர்கள்  அளித்தமருந்துச்சீட்டு இன்றி ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகளை, மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்துக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது

மேலும், ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் என்பது மனிதர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதில்லை. கால்நடைகள், மீன்கள், கோழிகளுக்கும் வழங்கப்படுகிறது. அந்த உயிரினங்களுக்கு அதிகளவில் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளை வழங்கி வளர்க்கும்போது அதை வாங்கி உண்ணும்மனிதர்களுக்கும் அந்த மருந்தின் சக்தி உடலில் செல்லும். இதைத் தடுக்கவும் கேரள அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios