PM Covid Meeting :பிளான் பண்ணிடிங்க! பிரதமர் கோவிட் மீட்டிங் எதுக்குணு புரிஞ்சிருச்சு! காங்கிரஸ் கிண்டல்
கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துவதும், ராகுல் காந்திக்கு சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம் எழுதியதும் எதற்கு எனப் புரிந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.
கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துவதும், ராகுல் காந்திக்கு சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம் எழுதியதும் எதற்கு எனப் புரிந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.
டெல்லிக்குள் பாரத் ஜோடோ யாத்திரை நுழைய இருக்கும் சில நாட்களுக்கு முன் கொரோனா தொடர்பாக இதுபோன்ற கட்டுப்பாடுகள், ஆலோசனைக்கூட்டங்களை பாஜக அரசு நடத்துகிறது என்று காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
இந்தியாவுக்கு இரு தேச தந்தைகள்! நவீன இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி: அம்ருதா பட்நாவிஸ் புகழாரம்
சீனா, அமெரிக்கா, ஜப்பான் , தென் கொரியா ஆகிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸின் திரிபான பிஏ7 வகை வைரஸ் பரவி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். இந்தியாவிலும் இந்த வைரஸால் 4 பேர்பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, பிரதமர் மோடி இன்று பிற்பகலில் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளார்.
இதற்கிடையே கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பாரத் ஜோடோ யாத்திரையில் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்.
4 பேருக்கு உருமாற்ற கொரோனா கண்டுபிடிப்பு: பிரதமர் மோடி அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை
இந்நிலையில் ஹரியானாவில் ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் பாரத் ஜோடோ நடைபயணம் வரும் 24ம் தேதி முதல் டெல்லிக்குள் செல்கிறது. டெல்லிக்குள் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் திரிபு வைரஸ், ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பரில் குஜராத், ஒடிசாவிலும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராகுல் காந்திக்கு நேற்று கடிதம் எழுதினார், பிரதமர் மோடி இன்று கொரோனா சூழல், பரவல் குறித்து அவசர ஆலோசனை நடத்துகிறார். 24ம்தேதி பாரத் ஜோடோ யாத்திரை டெல்லிக்குள் வருகிறது. இப்போது உங்களின் திட்டம், செயல்பாடு என்ன என்பது புரிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
:காய்ச்சல்,தொண்டை வலியை லேசா நினைக்காதீங்க:கேரள மக்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை
காங்கிரஸ் கட்சி கூறுகையில் “ ராஜஸ்தானிலும், கர்நாடகாவிலும் பாஜக சார்பில் நடைபயணம் நடத்தப்படுகிறது. அங்குள்ள பாஜகவுக்கு மத்திய அமைச்சர் கடிதம் எழுதவில்லை. பாரத் ஜோடோ யாத்திரை நடத்தும் ராகுல் காந்திக்கு மட்டும் கடிதம் எழுதியுள்ளார்” எனகேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Bharat Jodo Yatra
- Congress party
- Coronavirus
- Jairam Ramesh
- Narendra Modi
- PM Covid Meeting
- Prime Minister Narendra Modi
- Rahul Gandhi
- Union Health Minister Mansukh Mandaviya
- corona cases in india
- corona news
- corona update
- coronavirus india
- coronavirus update
- covid cases in delhi
- covid cases in india in last 24 hours
- india covid cases
- corona update in india