Covid new variant BF7: 4 பேருக்கு உருமாற்ற கொரோனா கண்டுபிடிப்பு: பிரதமர் மோடி அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை

இந்தியாவிலும் கொரோனா வைரஸின் பிஎப்7 உருமாற்ற வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி  அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

Today is the PM's Covid Review Meeting; 4 Cases of Variant in China Found in India

இந்தியாவிலும் கொரோனா வைரஸின் பிஎப்7 உருமாற்ற வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி  அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா நாடுகளில் ஒமைக்ரான் வைரஸின் பிஎப்-7 உருமாற்ற வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் இந்த வகை உருமாற்ற வைரஸால் பாதி்க்கப்படுபவர்களும், அதனால் உயிரிழப்போரும் அதிகரித்து வருகிறார்கள். 

இந்தியாவில் ஒமிக்ரான் திரிபு... 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்!!

இதையடுத்து, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாகக் கடைபிடிக்க  மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இதனிடையே சீனாவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரானின் பிஎப்-7 வகை வைரஸால் இந்தியாவில் குஜாராத், ஒடிசாவில் 4 பேர் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொருமாநிலமும் கண்காணிப்பையும், பரிசோதனையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று பிற்பகலில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்தும், எவ்வாறு முன்னெச்சரிக்கையாக தயாராகியுள்ளோம், விழிப்புணர்வு எவ்வாறு மக்களிடம் உள்ளது, தடுப்பூசி நிலவரம் உள்ளிட்டவை குறித்து உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனாவை விட ஆபத்தானது கொரோனா மாறுபாடான XBB வைரஸ்… அறிகுறிகள் என்ன? பாதுகாத்துக்கொள்வது எப்படி?

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள், பல்வேறு பிரிவு அதிகாரிகளுடன் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில் அவர் கூறுகையில் “ கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. 

ஆதலால், மக்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கைகளை சானிடைசர் பயன்பாடு, சமூக விலகல், போன்றவற்றை பின்பற்ற வேண்டும். மாநில அரசுகள் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும், மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை! அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

நாட்டில் உள்ள பல்வேறு விமானநிலையங்களில் சர்வதேச பயணிகளிடம் திடீரென பரிசோதனை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில்யாருக்கேனும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவரின் பயண விவரங்களை அறிந்து மரபணு பரிசோதனைக்கு அவரின் மாதிரிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios