Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் ஒமிக்ரான் திரிபு... 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்!!

சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய BF 7 என்ற ஒமைக்ரான் வகை திரிபு வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

new strain of BF7 virus has been discovered in India
Author
First Published Dec 21, 2022, 7:15 PM IST

சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய BF 7 என்ற ஒமைக்ரான் வகை திரிபு வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலகை முடக்கியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் முன்னெப்போதையும் விட அதிகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. இதனிடையே சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய BF 7 என்ற ஒமைக்ரான் வகை திரிபு வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா… சென்னையில் 108 பேருக்கு தொற்று!!

அமெரிக்காவில் இருந்து குஜராத் திரும்பிய 61 வயது மூதாட்டியிடம் BF 7 என்ற ஒமைக்ரான் வகை திரிபு வைரஸ் பாதிப்பு இருந்து தெரியவந்துள்ளது. இதேபோல் ஒடிஷாவிலும் ஒருவருக்கு BF 7 என்ற ஒமைக்ரான் வகை திரிபு வைரஸ் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து முன்னெச்சரிக்கையாக விமானங்களில் பயணம் செய்வோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொரோனாவை விட ஆபத்தானது கொரோனா மாறுபாடான XBB வைரஸ்… அறிகுறிகள் என்ன? பாதுகாத்துக்கொள்வது எப்படி?

இதனிடையே டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துறைசார் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிப்பு தொடர்பாக அச்சப்பட தேவை இல்லை. எந்த ஒரு சூழ்நிலையையும் நாம் எதிர்கொள்ள முடியும். நிச்சயம் நாம் எதிர்கொள்வோம். சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவின் புதிய உருமாற்றத்தால் எதிர்வரும் பண்டிகையையும் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா பரவல் இன்னும் முழுமையாகக் குறையவில்லை. எனவே கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios