Pinarayi Vijayan:காய்ச்சல்,தொண்டை வலியை லேசா நினைக்காதீங்க:கேரள மக்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை

காய்ச்சல், தொண்டையில் கரகரப்பு, வலி, ஜலதோஷம் இருந்தால் மக்கள் எளிதாக எடுக்க வேண்டாம் என்று கேரளமக்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Dont overlook a fever or sore throat: Kerala is taking steps its vigilance amid the Covid outbreak

காய்ச்சல், தொண்டையில் கரகரப்பு, வலி, ஜலதோஷம் இருந்தால் மக்கள் எளிதாக எடுக்க வேண்டாம் என்று கேரளமக்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் முதல் அலையில் பெரும்பாலும் பாதிக்காமல் தப்பித்த கேரள மாநிலத்தை 2வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பிலிருந்து கேரள மக்கள் மீள்வதற்கு நீண்டகாலம் தேவைப்பட்டது.

4 பேருக்கு உருமாற்ற கொரோனா கண்டுபிடிப்பு: பிரதமர் மோடி அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை

இருப்பினும் இன்னும் கேரளாவில் கொரோனா பாதிப்பு தினசரி மிகக்குறைந்த அளவே இருந்து வருகிறது. சீனாவில் தற்போது கொரோனாவின் உருமாறிய பிஎப்-7 வைரஸ் பரவி வருவதையடுத்து, உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கத் தொடங்கியுள்ளன.

அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியாவிலும் பிஎப்-7 வைரஸ் பரவலால் மீண்டும் உலக நாடுகள் கொரோனாகட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த உள்ளன. இந்தியாவிலும் இந்த வகை வைரஸ் 4 பேருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அதிகாரிகளுடன் கூடி ஆலோசனை நடத்தினார். 

அந்த ஆலோசனையின் முடிவில் அவர் கூறுகையில் “ கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. 
ஆதலால், மக்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கைகளை சானிடைசர் பயன்பாடு, சமூக விலகல், போன்றவற்றை பின்பற்ற வேண்டும். மாநில அரசுகள் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும், மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

எந்த சூழலையும் சமாளிக்க தயார்... கொரோனா குறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா டிவீட்!!

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும், மாநிலத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். 

முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “  கேரள மாநிலத்திலும் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தஅரசு முடிவு எடுத்துள்ளது. மக்கள் ஜலதோஷம், காய்ச்சல்,தொண்டை எரிச்சல், வலி ஆகியவற்றை லேசாக எடுக்காமல் மருத்துவரிடம் முறைப்படி சிகிச்சை எடுக்க வேண்டும்.

இப்போது கேரளாவில் சிலர்தான் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தனிநபர்கள் அனைவரும் தங்கள் சுயபாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருப்பதாக உணர்ந்தால், கூட்டத்துக்குள் செல்ல வேண்டாம். விரைவில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் அதிரடி நடவடிக்கை குழுவினரிடம் ஆலோசனை நடத்தப்படும்” இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios