எந்த சூழலையும் சமாளிக்க தயார்... கொரோனா குறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா டிவீட்!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்குப் பின் எந்த ஒரு சூழலையும் சமாளித்திட தயாராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

mansukh mandaviya tweets that ready to deal with any situation of corona

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்குப் பின் எந்த ஒரு சூழலையும் சமாளித்திட தயாராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சீனாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலையில் சடலங்களை எரிக்க மயானங்களில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் ஒமிக்ரான் திரிபு... 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்!!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா மற்ற நாடுகளுக்கும் பரவிய நிலையில் தற்போது அதுபோல பரவும் வாய்ப்புள்ளதல் மற்ற நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா நிலவரம் குறித்து உயரதிகாரிகள், நிபுணர்ககளிடம் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: கொரோனாவை விட ஆபத்தானது கொரோனா மாறுபாடான XBB வைரஸ்… அறிகுறிகள் என்ன? பாதுகாத்துக்கொள்வது எப்படி?

பின்னர் கூட்டநெரிசல் அதிகம் உள்ள இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த அலோசனைக்கு பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனா இன்னும் முடியவில்லை, அனைத்து மாநிலங்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்துக, எந்த ஒரு சூழலையும் சமாளித்திட தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios