கடவுளின் சொந்த நாடு என்று கருதப்பட்டு வந்த கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. ஏறத்தாழ 100 ஆண்டுகளில் பெய்யாத மழை இப்போது பெய்து சுமார் 20 ஆயிரம்  கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டு உள்ளது.

.இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 2¼ லட்சத்துக்கும் மேலான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

கேரளாவில் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைப்பெற்று வருகிறது.

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.படிப்படியாக மழை குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வெள்ளச்சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் பினராயி  செய்தியாளர்களிடம் பேசினார்.  

அப்போது கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 22,034 பேர் மீட்கபட்டுள்ளனர். வெள்ளப்பாதிப்பால் 5 லட்சம் பேர் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது. 

அதே நேரத்தில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் விநியோகம் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும்,  வெள்ளம் வடிந்தால் தான் முழுமையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

ஆனாலும் அடுத்தடுத்து சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொண்டு . வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.