வந்தே பாரத் ரயில் கழிப்பறைக்குள் அலப்பறை! மர்ம நபரை கதவை உடைத்து வெளியே இழுத்த ரயில்வே!

திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை இயக்கப்பட்டும் வந்தே பாரத் ரயிலில் ஒளிந்துகொண்டு வெளியே வராமல் இருந்த நபர் கதவை உடைத்து வெளியே கொண்டுவரப்பட்டார்.

Kerala Man Shuts Self In Vande Bharat Washroom, Brought Out By Force

கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு விநோதமான சம்பவம் நடந்ததுள்ளது. கேரளாவின் வடக்கு காசர்கோடு மாவட்டத்தில் ரயிலில் ஏறிய ஒருவர், ரயிலில் உள்ள கழிவறை ஒன்றிற்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அங்கிருந்து வெளியே வர மறுத்துவிட்டார் என்று  ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை இயக்கப்பட்டும் வந்தே பாரத் ரயிலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ரயில் பாலக்காட்டில் உள்ள ஷோர்னூர் ரயில் நிலையத்திற்கு வந்த பின்னர் தான் கழிவறை கதவை உடைத்து அவர் வெளியே கொண்டு வரப்பட்டார்.

இது புளிக்குழம்பா எலிக்குழம்பா! உ.பி. மருத்துவக் கல்லூரி உணவில் செத்துக் கிடந்த எலி!

Kerala Man Shuts Self In Vande Bharat Washroom, Brought Out By Force

கழிவறையில் இருந்து வெளியே வந்த அந்த நபர் சிவப்பு டி-சர்ட் அணிந்திருந்தார். பயந்துபோனவராகத் தோன்றிய அவரிடம் ரயில் நிலைய நடைமேடையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதற்றத்துடன் பதில் அளித்தார்.

முதலில் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்று சொல்லி இந்தியில் பேசிய அந்த நபர், பின்னர் தான் காசர்கோட்டை சேர்ந்தவர் என்று மாற்றிக் கூறினார். அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் சொல்கின்றனர். மேலும் அந்த நபரிடம் ரயில் டிக்கெட் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

6 இஸ்லாமிய நாடுகள் மீது 26,000 குண்டுகளைப் போட்டது ஒபாமா: நிர்மலா சீதாராமன் பதிலடி

Kerala Man Shuts Self In Vande Bharat Washroom, Brought Out By Force

யாரோ அவரைப் பின்தொடர்ந்து வந்ததாவும், அவர்களிடமிருந்து தப்பி ஓட முயற்சி செய்தபோது, ஒளிந்து கொள்வதற்காக ரயிலில் ஏறி கழிவறைக்குள் சென்று மறைந்துகொண்டதாவும் ரயில்வே போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு ரயில் நிலையங்களில் ரயில் நின்றபோது ரயில்வே போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் அவரை வெளியே கொண்டுவர பலமுறை அறிவுறுத்தினர். ஆனால், அவர் பிடிவாதமாக கழிவறையை விட்டு வெளியே வராமல் இருந்துவிட்டார் என்றும் ரயில்வே அதிகாரிகள் சொல்கின்றனர்.

பணிநீக்கம் செய்த ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கொடுத்த கூகுள்! காரணம் இதுதானாம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios