கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுடைய சொந்த மகள் தான் வீணா விஜயன், இவருக்கு கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மாத கணக்கில் சில லட்சங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் ஒன்று தற்பொழுது எழுந்துள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் அவர்கள் கேரளாவில் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் பெயர் தான் Exalogic. இந்த ஐடி நிறுவனமானது தகவல் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் மற்றும் மென்பொருள் சேவைகள் குறித்தும் பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொச்சியில் செயல்பட்டு வரும் சிஎம்ஆர்எல் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட, வீனா விஜயனின் நிறுவனத்திற்கும், அந்த நிறுவனத்திற்கும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வீணாவின் ஐடி நிறுவனத்திலிருந்து எந்த சேவையும் வழங்கப்படாத நிலையில் கடந்த மூன்று ஆண்டு காலமாக CMRL நிறுவனத்தில் இருந்து வீனாவின் நிறுவனத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் மற்றும் மீனாவின் சொந்த கணக்கிற்கு சுமார் 5 லட்சம் ரூபாயும் பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இந்த பணத்தை கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளில் வீணா விஜயனுக்கு சுமார் 1.72 கோடி ரூபாய் பணவர்த்தனை நடந்துள்ளதும் தெரியவந்தது. சேவைகள் வழங்கப்படாமலேயே இவ்வளவு பணம் அனுப்பப்பட காரணம் என்ன என்பது குறித்து தற்பொழுது வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மாநிலத்தை ஆளும் ஒரு முதல்வரின் மகள் இப்படி ஒரு சிக்கலில் சிக்கி இருப்பது, அம்மாநில அரசியல் களத்தில் மாபெரும் சூறாவளியை கிளப்பி உள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் தற்பொழுது இந்த விஷயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், கேரளாவை ஆளும் சிபிஐ(எம்) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "இரண்டு முறையான நிறுவனங்கள், சட்டப்பூர்வமாக ஒருவருக்கொருவர் சேவை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி ஆண்டு அடிப்படையில் பணம் வழங்கப்பட்டுள்ளது என்றும்" கூறியுள்ளது.
"அரசியல்வாதிகளின் பிள்ளைகள் மற்ற குடிமக்களுக்கு ஒரு சட்டபூர்வமான தொழிலை செய்ய உரிமை உண்டு. இதன் அடிப்படையில் வீணா ஒரு ஆலோசனை நிறுவனத்தையும் தொடங்கினார். நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையானவை. மேலும் பணம் கொடுத்த நிறுவனமும் இந்த விஷயத்தில் பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. இந்த விஷயத்தில் முதலமைச்சருக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“நீண்ட காலமாக, வலதுசாரி கேரள ஊடகங்கள், மத்திய அமைப்புகள் மற்றும் பிறர் தரும் செய்திகளை மிகைப்படுத்திக் காட்டுகின்றன. அதே சமயம், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்த அவர்கள் தயாராக இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மகளுக்குப் பணம் எங்கிருந்து வந்தது? பினராயி விஜயன் ஊழல் வழக்கில் சிக்கப் போகிறார் என பாஜக எச்சரிக்கை
