G20 presidency: கேசிஆர்-மோடி மோதல் முற்றுகிறது: ஜி20 அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்ப்பு

பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மோதல் முற்றுவதால் ஜி20 உச்சி மாநாடு நடத்துவது குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கேசிஆர் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கன்றன.

KCR is likely to miss the all-party meeting on the G20 presidency

பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மோதல் முற்றுவதால் ஜி20 உச்சி மாநாடு நடத்துவது குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கேசிஆர் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கன்றன.

ஜி-20 நாடுகள் தலைவராக இந்தியா டிசம்பர் 1ம் தேதி முதல் அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் இந்த மாநாட்டை நடத்துவது குறித்து மத்தியஅரசு அனைத்து கட்சித் தலைவர்கள், முதல்வர்களை இன்று ஆலோசனைக்கு அழைத்துள்ளது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா ராஜஸ்தான் சென்றது

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கிளின் முதல்வர்கள் பங்கேற்பை உறுதி செய்துள்ளனர். இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ஜி20 மாநாட்டுக்கு தயாராவது குறித்து விளக்கப்படுகிறது. 
ஜி20 உச்சி மாநாட்டுக்கு தயாராவது குறித்து நாடுமுழுவதும் 200 தயாரிப்பு கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இன்று மாலை நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தெலங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஒடிசா முதல்வர் பஜூபட்நாயக், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இதில் தெலங்கானா முதல்வரும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே அரசியல் மோதல் வலுத்துள்ளது. இதுவரை தெலங்கானாவுக்கு 5 முறை பிரதமர் மோடி சென்றும் அவரை நேரில் சென்று சந்திரசேகர் ராவ் சந்திக்கவில்லை. 

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம்: மத்திய அரசு ஆலோசனை

இருவரும் பல்வேறு அரசியல் கூட்டங்களில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதில் தெலங்கானா முதல்வரின் மகளும், எம்எல்சியான கவிதாவை டெல்லி மதுபான ஊழல் வழக்கில் விசாரிக்க சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது கேசிஆர், மோடி இடையிலான மோதலை மேலும் உச்சத்துக்கு கொண்டுசென்றுள்ளது.

மத்திய நாடுளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில் “ நான் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசிவிட்டேன்,ஆனால், தெலங்கானா முதல்வர் கேசிஆர் பங்கேற்பு குறித்து உறுதி செய்யவில்லை. இது அரசியல் கட்சித் த லைவர்களுக்கான சந்திப்பு, இதில் கட்சித் தலைவர்கள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்புக்கு அனுமதியில்லை” எனத் தெரிவித்தார்.

டிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கேசவ் ராவ் கூறுகையில் “ அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க வருவமாறு எந்தவிதமான தகவலும் மத்திய அரசு சார்பில் இல்லை” எனத் தெரிவித்தார். 

குஜராத் தேர்தல்:அகமதாபாத்தில் மக்களோடு வரிசையில் நின்று பிரதமர் மோடி வாக்களித்தார்

ஆந்திர முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தனிப்பட்ட பணி காரணமாக பங்கேற்க முடியாது எனத் தெரிவித்துவிட்டார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அந்தக் கட்சியிலிருந்தும் யாரும் பங்கேற்கமாட்டார்கள் எனத் தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios