Rahul Gandhi's Bharat Jodo Yatra : ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா ராஜஸ்தான் சென்றது
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை, ராஜஸ்தான் மாநிலம் வந்தடைந்தது. ஜலாவார் மாவட்டத்திலிருந்து இன்று காலை ராகுல் காந்தி யாத்திரையைத் தொடங்கினார்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை, ராஜஸ்தான் மாநிலம் வந்தடைந்தது. ஜலாவார் மாவட்டத்திலிருந்து இன்று காலை ராகுல் காந்தி யாத்திரையைத் தொடங்கினார்
ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கியது. இதுவரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசத்தை முடித்து நேற்று காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் வந்து சேர்ந்தது.
E-Wallet:NIA இ-வாலட்களை கண்காணிக்கும் என்ஐஏ! என்ன காரணம்?
ராகுல் காந்தியின் நடைபயணம் இன்றுடன் 89-வது நாளை எட்டியுள்ள நிலையில், ராஜஸ்தான்-மத்தியப்பிரதேச எல்லையான ஜலாவர் மாவட்டத்துக்குள் வந்து சேர்ந்தது. இன்று காலை ஜல்ராபதானின் உள்ள காலி தாலி என்ற இடத்திலிருந்து ராகுல் காந்தி தனது நடைபயணத்தைத் தொடங்கினார்.
ராகுல் காந்தி காலை நடைபயணத்தைத் தொடங்கியபோது, காலிதாலி பகுதியில் கடும் குளிர் நிலவியது, 13 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனாலும், ராகுல் காந்தி, பேன்ட், டிஷர்ட் அணிந்தபடியே தனது நடைபயணத்தைத் தொடங்கினார். ஆனால், ராகுல் காந்தியுடன் வந்த மற்ற தலைவர்கள் குளிருக்கு இதமாக ஜாக்கெட்டுகளை அணிந்து நடந்தனர்
ராகுல் காந்தியுடன் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ராஜஸ்தாந் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோத்ஸரா, பான்வர் ஜிதேந்திர சிங், அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் ஆகியோர் வந்தனர்.
உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம்: மத்திய அரசு ஆலோசனை
ராகுல் காந்தி தனது நடைபயணத்தினப்போது சாலையில் நின்றிருந்த குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தார். அதன்பின் ஒரு தாபாவில் அமர்ந்து ராகுல் காந்தி தேநீர் பருகினார். இந்த நடைபயணத்தின்போது அமைச்சர் ரகுவீர் மீனாவுக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
14 கி.மீ தொலைவு நடந்த ராகுல் காந்தி, பாலிபோர்டா சவுரகா பகுதியில் அடைந்தவுடன் நிறுத்தினார். மதிய உணவு மற்றும் சிறிய இடைவேளைக்குப்பின் பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் ராகுல் காந்தி நடைபயணத்தைத் தொடங்குவார்.
காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாரத் ஜோடோ யாத்திரை வீரமண்ணுக்கு சல்யூட் செய்கிறது. வரலாற்று மண்ணான ராஜஸ்தான், மீண்டும் புதிய வரலாறு படைக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
குஜராத் தேர்தல்:அகமதாபாத்தில் மக்களோடு வரிசையில் நின்று பிரதமர் மோடி வாக்களித்தார்
டிசம்பர் 5ம் தேதி ராஜஸ்தானுக்கு வந்துள்ள ராகுல் காந்தியின் நடைபயணம், டிசம்பர் 21ம் தேதிவரை 500 கி.மீ தொலைவை ராஜஸ்தானில் கடக்க உள்ளது. குறிப்பாக ஜலாவர், கோட்டா, பண்டி, சவாய் மதோபூர், தவுசா, ஆல்வார் ஆகிய மாவட்டங்களை 17 நாட்களில் ராகுல் காந்தி கடக்க உள்ளார். இந்த பயணத்தின்போது, தவுசாவில் விவசாயிகளுடன் வரும் 15ம் தேதி ராகுல் காந்தி உரையாடுகிறார், வரும் 19ம் தேதி ஆல்வாரில் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்