காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்  370-வது  பிரிவு நீக்கப்படும் என்று மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே அறிவிக்கப்பட்டது. 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தஒப்புதல் அளித்தார். இதற்கான அறிவிப்பு ஆணையையும் அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இயற்றப்படும் சட்டங்கள் இனி காஷ்மீருக்கும் பொறுந்தும். ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக மாநிலமாக மாற்றப்பட உள்ளது.  
சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் பகுதி மாற்றப்பட உள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததால் காஷ்மீர் பெண்கள் பிற மாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டாலும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே நாடாளுமன்ற சட்டங்களை அமைல்படுத்த முடியும்.