பீகார் மாநிலத்தில், ஏழாம் வகுப்பு வினாத்தாளில் காஷ்மீர் தனி நாடு என கேட்கப்பட்ட கேள்வி நாடு முழுவதும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் ஆங்கில கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த கேள்வி தான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அந்த கேள்வித்தாளில் சீனா, நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்கள் எப்படி அழைக்கப்படுகிறார்கள் என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது.
இதில் சீனா, நேபாளம், இங்கிலாந்து, இந்தியா ஆகியவை தனி நாடுகளாக உள்ள நிலையில் இந்தியாவில் உள்ள காஷ்மீரையும் தனிநாடு என்ற அடிப்படையில் இந்த கேள்வி அமைந்துள்ளது. இதுதான் சர்ச்சைக்கு காரணமாகி இருக்கிறது. இதுகுறித்து பதில் அளித்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ‘இந்த கேள்வித்தாள் பீகார் கல்வி வாரியத்தின் மூலமாக பெறப்பட்டது. காஷ்மீர் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்று கேட்கப்பட்டிருக்க வேண்டும்.

இதையும் படிங்க..தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வுக்கு போங்க.. உருவான இந்து Vs முஸ்லீம் சர்ச்சை - தெலங்கனாவில் பரபரப்பு
தவறுதலாக காஷ்மீர் நாட்டு மக்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மனித தவறு’ என்று விளக்கம் அளித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் முன்னணி தலைவராக உள்ள சுஷாந்த் கோபே, ‘இது பீகாரில் நடக்கும் கூட்டணி ஆட்சியில் செயல். குழந்தைகளின் மனதில் காஷ்மீரையும், இந்தியாவையும் பிரித்து காட்டும் முயற்சி நடக்கிறது.
இது தவறான நோக்கம். வரும் தேர்தலுக்கு முன்பு அரசியல் செல்வாக்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நிதிஷ் குமார் சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக தான் இந்த கேள்வி இருக்கிறது’ என்று கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க..உணவளித்தவருக்கு கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்திய குரங்கு.. நெகிழ வைத்த சம்பவம் - வைரல் வீடியோ!
