ஜம்மு காஷ்மீரில் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் ஜீலம் நதி, கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் வற்றி காணப்படுகிறது.

குளுகுளு பிரதேசமான ஜம்மு காஷ்மீரில், பல்வேறு நதிகள் பாய்ந்து அம்மாநிலத்தை வளப்படுத்துகின்றன.

ஸ்ரீநகரில் அமைந்திருக்கும் தால் ஏரி போல் அங்கு பாயும் ஜீலம் நதியும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான பருவமழை பெய்யவில்லை. இதனால், முக்கிய நீர்நிலைகளில் போதுமான அளவு தண்ணீரின்றி காணப்படுகிறது.

ஜீலம் நதியிலும் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் வற்றியுள்ளது.

இதனால், இந்த நதி பொலிவிழந்து காணப்படுகிறது. இது அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது