கர்நாடக அரசின் உள்ளூர் மக்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை ரத்து செய்ய வேண்டும் : நாஸ்காம் கோரிக்கை..
தனியார் துறையில் இருக்கும் வேலைகளை உள்ளூர் மக்களுக்கான ஒதுக்கீடு செய்யும் மசோதாவை கர்நாடகா ரத்து செய்ய வேண்டும் என்று நாஸ்காம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில், நிர்வாகப் பணிகளில் 50 சதவீதமும், நிர்வாகம் அல்லாத பணிகளில் 70 சதவீதமும் உள்ளூர் மக்களுக்கு (கன்னடர்களுக்கு) ஒதுக்கப்பட வேண்டும் என்ற வரைவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 15-ம் தேதி முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய அமைப்பான நாஸ்காம் தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்கு வேலை ஒதுக்குவதை நோக்கமாகக் கொண்ட கர்நாடக மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
Train Cancelled: ரயில் பயணிகளே உஷார்.. ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 7 வரை.. ரயில்கள் ரத்து!
இதுகுறித்து நாஸ்காம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் " கர்நாடக மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாவால் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர். நாஸ்காம் உறுப்பினர்கள் இந்த மசோதாவின் விதிகள் குறித்து தீவிரமாக அக்கறை கொண்டுள்ளனர். எனவே மசோதாவை திரும்பப் பெறுமாறு மாநில அரசை வலியுறுத்துகின்றனர். எனவே இந்த கட்டுப்பாடுகள் திறமையாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு நிறுவனங்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும்.
இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக விளங்குவதால் கர்நாடக அரசின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்நுட்ப துறை மிகவும் முக்கியம். தொழில்நுட்பத் துறையானது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது, நாட்டின் டிஜிட்டல் திறமையில் கால் பகுதியினர், 11,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் மற்றும் மொத்த உலகளாவிய திறன் மையங்களில் (ஜிசிசி) 30 சதவீதம் உள்ளனர்.
இந்த மசோதா முன்னேற்றத்தை மாற்றியமைக்கும், நிறுவனங்களை மாநிலத்தில் இருந்தே விரம். பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களை முடக்கவும் வழிவகுக்கும். குறிப்பாக GCC போன்ற பல உலகளாவிய நிறுவனங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றன.
தொழில்துறையின் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் மாநிலத்தின் உலகளாவிய முத்திரையை பாதிக்கும் இந்த மசோதாவைப் பார்ப்பது மிகவும் கவலை அளிக்கிறது.. மாநிலங்கள் ஒரு முக்கிய தொழில்நுட்ப மையமாக மாறுவதற்கு இரட்டை மூலோபாயம் முக்கியமானது. ஒன்று உலகளவில் சிறந்த திறமையாளர்களுக்கான காந்தம், இரண்டாவது முறையான மற்றும் தொழில்சார் வழிகள் மூலம் மாநிலத்திற்குள் வலுவான திறமைக் குழுவை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் முதலீடு. இந்த மசோத குறித்து மாநில அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த கூட்டத்தில் புதிய மசோதா தொடர்பான கவலைகள் குறித்து விவாதிக்கப்படும். மேலும் மாநில வளர்ச்சியை தடம் புரளாமல் தடுக்க இது உதவும்..” என்று தெரிவித்தார்.
தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்குவதற்கான கர்நாடக அரசாங்கத்தின் நடவடிக்கை, தொழில்துறை தலைவர்களிடமிருந்து கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது, இந்த நடவடிக்கை திறமை மற்றும் முதலீட்டை மாநிலத்திற்கு வரவிடாமல் தடுக்கும் என்று வாதிடுகின்றனர்.
தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஒதுக்க முயற்சிக்கும் முதல் மாநிலம் கர்நாடகம் அல்ல. சமீபத்தில் ஹரியானாவிலும் . பாஜக தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் முடிவை நவம்பர் 2023 இல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் நிராகரித்தது. ஹரியானா சட்டம் ரூ. 30,000-க்கும் குறைவான வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது.