அமைச்சர் சிவக்குமார் அதிரடி கைது... கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பதற்றம்..!

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக மும்பையில் உள்ள ஓட்டல் முன் காத்திருந்த கர்நாடக அமைச்சர் சிவக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Karnataka Minister DK Shivakumar arrest

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக மும்பையில் உள்ள ஓட்டல் முன் காத்திருந்த கர்நாடக அமைச்சர் சிவக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Karnataka Minister DK Shivakumar arrest

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்- மஜத கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் மும்பை ஓட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 Karnataka Minister DK Shivakumar arrest

இந்நிலையில், மும்பையில் சொகுசு விடுதியில் தங்கி உள்ள ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவக்குமார் தடுத்து நிறுத்தப்பட்டார். தனக்கு இந்த ஓட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியும் போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மாறாக சிவக்குமார் முன்பதிவு செய்திருந்த அறை, மாதாந்திர பராமரிப்பு பணி எனக் கூறி ரத்து செய்யப்பட்டது. இருந்தும் எம்.எல்.ஏ.க்களை மீட்காமல் அங்கிருந்த செல்ல போவதில்லை எனக் கூறி கொட்டும் மழையில் சிவக்குமார் காத்திருந்தார். ராஜினாமா எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டல் பகுதியில் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Karnataka Minister DK Shivakumar arrest

இந்நிலையில், பிற்பகல் 2.45 மணியளவில் அமைச்சர் சிவக்குமாரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் கர்நாடகாவில் பா.ஜ.க.வை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios