Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு; காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நிலவரம் என்ன?

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 12,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

karnataka heavy rains : What is the situation in Cauvery catchment areas?
Author
First Published Jul 24, 2023, 12:50 PM IST

கபினி, கேஆர்எஸ் அணையில் இருந்து 12,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 2,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கர்நாடக கடலோரப் பகுதியில் இன்று வரை ஆரஞ்சு எச்சரிக்கையை நீட்டித்துள்ள வானிலை மையம் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக உடுப்பி, குடகு மற்றும் தார்வாட் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், மழை பெய்யும் போது, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. பெலகாவி, யாத்கிர், தார்வாட் மற்றும் பிதார் மாவட்டங்களுக்கும் மாநில வானிலைத் துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும்.

நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி ஆப்சென்ட்: இரு அவைகளும் ஒத்தி வைப்பு!

வட கர்நாடகாவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதிகாரிகளின் கூற்றுப்படி, இப்பகுதியில் உள்ள 16 குறைந்த உயர பாலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பேரழிவுகளைத் தடுக்கவும், பாலங்களில் பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நடமாட காவல்துறையினர் காவல் விடுத்துள்ளனர். பாலங்களின் இரு முனைகளிலும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, மேலும் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 12 மணி நேரத்தில் பெய்த மழையில் 3 அடி தண்ணீர் நிரம்பியது கே.ஆர்.எஸ். 92.60 அடி கொண்ட அணை நிரம்பிய நிலையில், தற்போது 95 அடிக்கு தண்ணீர் உள்ளது. நேற்று மாலை, 17.548 டி.எம்.சி., நீர் சேமிக்கப்பட்டதால், நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. அணைக்கு 29,552 கனஅடி தண்ணீர் வரத்து உள்ள நிலையில், 5,297 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் குடகிலும் நல்ல நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கபினி, கேஎஸ்ஆர் அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணையில் இன்றைய (ஜூலை 24) நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 165 கன அடியாக அதிகரித்து, டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் தற்போது 67.91 அடியாக உள்ளது. வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தமிழ்நாட்டின் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். இதைத்தொடர்ந்து கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு போக, தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடப்படும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எகிறி அடிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குகள்; 5 ஆண்டுகளில் 394.72% மதிப்பு உயர்வு!!

Follow Us:
Download App:
  • android
  • ios