கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தரம் சிங் (80) மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். கர்நாடகத்தில் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த தரம்சிங் 2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மாநிலத்தின் 17-வது முதல்வராக முதலமைச்சராக பதவி வகித்தார். 

கார்நாடகா சட்டமன்றத்திற்கு 1978 முதல் 2008 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக ஏழு முறைதேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தேவராஜ் அர்ஸ், குண்டுராவ், பங்காரப்பா, வீரப்பமொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் அமைச்சரவையில், அமைச்சராக பதவி வகித்துள்ளார். 

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அவர் அதன்பின் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிடார் மக்களவை உறுப்பினராக தெர்ந்தெடுக்கப்பட்டார்.

80 வயதான தரம் சிங்கிற்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமைய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆனால், அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் மரணம் அடைந்தார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தரம் சிங்கின் மனைவி பெயர் பிரபாவதி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தரம் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.