karnataka cm siddaramaiah sleeping in stage viral video
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் அல்லாத இந்தியா என்ற முழக்கத்துடன் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை பிடித்துவிட்ட பாஜக, காங்கிரஸ் வசமிருக்கும் கர்நாடகாவை கைப்பற்ற துடிக்கிறது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டும் ஓரளவிற்கு வலுவாக இருக்கும் பாஜகவை, அங்கிருந்தும் விரட்டி தென்னிந்தியாவிற்குள் பாஜகவை நுழையவிடக்கூடாது என்ற குரலை ஜிக்னேஷ் மேவானி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் எழுப்பி வருகின்றனர்.
கர்நாடக தேர்தல் நெருங்கிவிட்டதை ஒட்டி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் கர்நாடகாவில் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
காங்கிரஸ் சார்பிபிலும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், கலபுர்கியில் நடந்த தேர்தல் பிரசார காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் சித்தராமையா, மேடையில் அமர்ந்தபடியே தூங்கினார்.
<blockquote class="twitter-video" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&ref_src=twsrc%5Etfw">#WATCH</a> Karnataka Chief Minister Siddaramaiah seen dozing off during a rally in Kalaburagi earlier today. <a href="https://t.co/PjlNVKovlP">pic.twitter.com/PjlNVKovlP</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/990916223809605632?ref_src=twsrc%5Etfw">April 30, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
சிறிது நேரம் தூங்கிய அவரை, அருகில் அமர்ந்திருந்தவர் எழுப்பினார். விழித்து பார்த்த முதல்வர் சித்தராமையா, கையை வைத்து கன்னத்தை தாங்கியபடி மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
