Karnataka CM Kumarasamy Pressmeet

கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாவதற்கு கன்னடர்களுக்கு விருப்பம் இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது. ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்திய என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநில ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், காலா
படத்தை கர்நாடக மாநிலத்தில் தெடையின்றி வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காலா படம் வெளியாக இன்னும் ஒரு வார காலம் இருப்பதால், கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் என்றும் ரஜினி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கன்னட திரைப்பட வர்த்தக சம்மேளனம் மற்றும் கன்னட அமைப்புகள், முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து கலா படத்தை தடை செய்ய மனு கொடுத்துள்ளனர். 

முதலமைச்சர் குமாரசாமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, காலா படம் வெளியாவதில் கன்னடர்களுக்கு விருப்பம் இல்லை என்றார். திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார். மக்கள் வேண்டாம் என நினைத்தால் அரசு தலையிடாது முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனால், கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.