Virupakshappa: லஞ்ச ஊழல் வழக்கில் கர்நாடக பாஜக எம்எல்ஏ விருபாக்ஷப்பா கைது
லஞ்சம் வாங்கிய வழக்கில் மாட்டிக்கொண்ட கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. மடால் விருபாக்ஷப்பா தும்கூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. மடால் விருபாக்ஷப்பா லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, துமகூரு பகுதியில் சுங்கச்சாவடி அருகே விருபாக்ஷப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக எம்எல்ஏ மடல் விருபாக்ஷப்பா ரூ. 8.12 கோடி மோசடி வழக்கில் சிக்கினார். இதனிடையே, ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இவரது மகன் பிரசாந்தை, லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு மார்ச் 3ஆம் தேதி கைது செய்தது. இதையடுத்து எம்எல்ஏ வீட்டில் நடந்த சோதனையில் எட்டு கோடி ரூபாய் பணம் சிக்கியது.
2 மாத குழந்தையைக் கொன்ற சிறுமிகள்! பொம்மை போல நினைத்து விளையாடியதால் நேர்ந்த விபரீதம்!
கர்நாடக மாநிலம் தாவங்கரே மாவட்டத்தில் உள்ள சன்னகிரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மடல் விருபாக்ஷப்பா. 58 வயதான இவர் சன்னகிரி தொகுதியில் இருந்து 2008ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2013 சட்டமன்றத் தேர்தலில் வாட்டாள் ராஜண்ணாவிடம் தோல்வியடைந்தார். ஆனால் 2018ல் மீண்டும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏடிஆர் தரவுகளின்படி, 2018 தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது மடல் விருபக்ஷப்பாவுக்கு ரூ.5.73 கோடி சொத்து இருந்தது.
அந்த மாநில அரசுக்குச் சொந்தமான கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் தலைவராக இருந்தார். அந்தப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிறுவனம்தான் புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப்பை உற்பத்தி செய்கிறது. மகன் பிரசாந்த் தொடர்பான ஊழல் செய்தி வெளியானதும் விருபக்ஷப்பா அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.
"இந்த வழக்கில் இருந்து நான் விடுவிக்கப்படுவேன் என்று 100 சதவீதம் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனது வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது ஊழல் அல்ல. பணம் விவசாயம் மற்றும் குடும்பம் நடத்தும் மற்ற சட்டபூர்வமான தொழில்களில் இருந்து பெறப்பட்டது" என மடல் விருபாக்ஷப்பா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாதம் ரூ.11,000 பென்ஷன் கொடுக்கும் எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டம்!