பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பெயர் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை கர்நாடக ரக்சன வேதிகே அமைப்பினர் கறுப்பு வண்ணம் பூசி மறைத்து வருகின்றனர்.

இந்தி பேசும் இடங்களில் கன்னட மொழிகளில் பெயர் பலகை வைத்தார், கர்நாடகாவில் இந்தி மொழியில் பெயர்ப்பலகை வைக்க அனுமதிப்போம் என்று கன்னட ரக்சன வேதிகே அமைப்பு கூறியுள்ளது.

பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் இந்தி மொழி எழுதப்பட்டுள்ளது. இதனை, கர்நாடக ரக்சன வேதிகே அமைப்பினர் கறுப்பு வண்ணம் பூசி அழித்து வருகின்றனர்.

இந்தி எழுத்துக்கள் கறுப்பு வண்ணம் கொண்டு மறைக்கப்படுவது குறித்து கர்நாடக ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பேசும்போது, டெல்லி மற்றும் இந்தி பேசும் இதர பகுதிகளில் கன்னட மொழிகளில் பெயர்ப் பலகை வைத்தால், கர்நாடகாவில் இந்தி மொழியில் பெயர்ப்பலகை வைக்க அனுமதிப்போம் என்று கூறினார்.

கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகள் இங்குள்ள நிலம், மின்சாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். தொழிற்சாலைப் பணிக்கு கன்னடர்களையோ கன்னட மொழியையோ தொழிற்சாலை நிர்வாகம் பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.