kalabhavan mani death changed to cbi

பிரபல நடிகர் கலாபவன் மர்மமான மரணம் குறித்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி நடிகர் கலாபவன் மணி மது அருந்திய நிலையில் அவரது பங்களா வீட்டில் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கலாபவன் மணியின் மனைவி, சகோதரர் உட்பட அவரது உறவினர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு அளித்தனர்.

இதையடுத்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையில், எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதால் கேரளா நீதிமன்றம் இவ்வழக்கினை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

ஒரு மாதத்திற்குள் சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், இதுகுறித்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.