Asianet News TamilAsianet News Tamil

முக்கிய தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் 2-வது மூத்த நீதிபதி ஏஎம் கான்வில்கர் ஓய்வு

பல்வேறு முக்கிய வழக்குகளில் முக்கியத் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் 2-வது மூத்த நீதிபதி ஏஎம் கான்விலர் இன்றுடன் ஓய்வு பெற்றார்.

Justice Khanwilkar, a Supreme Court justice, retires.
Author
New Delhi, First Published Jul 29, 2022, 4:40 PM IST

பல்வேறு முக்கிய வழக்குகளில் முக்கியத் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் 2-வது மூத்த நீதிபதி ஏஎம் கான்விலர் இன்றுடன் ஓய்வு பெற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் பார் கவுன்சிலுக்கும், உறுப்பினர்களுக்கும், தன் மீது வைத்திருக்கும் அன்பு, அபிமானத்துக்கும் நன்றி என்று கான்வில்கர் தெரிவித்துள்ளார். 

பர்தா சாட்டர்ஜி மகள் வீட்டில் கொள்ளை: திருட்டு நாடகம் என எதிர்க்கட்சி விளாசல்

நீதிபதி கான்வில்கர் கடந்த 2016ம் ஆண்டு மே 13ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகாலத்தில் ஏராளமான வழக்குகளில் கான்வில்கர் தீர்ப்பு வழங்கினாலும், சில முக்கிய வழக்குகளில் அளித்த தீர்ப்பு திருப்புமுனையாக அமைந்தது.

ஆதார் வழக்கு, 2002 குஜராத் கலவரத்தின்போது, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தார். அவர் மீது மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு அவரை குற்றமற்றவர் என்று கூறியது. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து எஸ்ஐடி முடிவை உறுதி செய்தது கான்வில்கர்தான்.

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சரியானதுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!

Justice Khanwilkar, a Supreme Court justice, retires.

அமலாக்கப்பிரிவுக்கு கைது செய்ய உரிமை உண்டு, சொத்துக்களை பறிமுதல் செய்யவும்,சோதனையிடமும், சட்டவிரோதப் பணப்பரிமாற்றச்ச ட்டத்தின் கீழ் அதிகாரம் உண்டு என்று கான்வில்கர் தீர்ப்புவழங்கினார். இது தவிர  பல்வேறு அரசியலமைப்புச் சட்ட அமர்வுகளில் பல தீர்ப்புகளை கான்வில்கர் வழங்கியுள்ளார்.

கடந்த 1957ம் ஆண்டு, ஜூன் 30ம்தேதி புனேயில் கான்வில்கர் பிறந்தார். மும்பை சட்டக்கல்லூரியில் எல்எல்பி படித்த கான்வில்கர் 1982ம் ஆண்டு பிப்ரவரியில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். முதலில் 2000ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக கான்வில்கர் நியமிக்கப்பட்டார்.

அரசரே! கேள்விக்கு ஏன் பயப்படுகிறீர்கள்?: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

அதன்பின் 2013ம் ஆண்டு இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், பின்னர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவம் கான்வில்கர் நியமிக்கப்பட்டார். அதன்பின் 2016ம் ஆண்டு மே 13ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக கான்வில்கர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios