இந்தியாவில் திருமணம் முடியுங்கள்: வசதி படைத்தவர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்!
இந்தியாவில் திருமணம் முடியுங்கள் என வசதி படைத்தவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளை - புற்றுநோய் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், லேவா பட்டிதார் சமூகத்தினர் 14 ஆண்டுகளுக்கு முன்பு சேவை, மதிப்புகள், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் தீர்மானத்துடன் ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளையை நிறுவியதாக தெரிவித்தார்.
அப்போதிலிருந்து, இந்த அறக்கட்டளை தனது சேவையின் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்குப் பணியாற்றி வருவதாகப் பிரதமர் கூறினார். “கல்வி, விவசாயம், சுகாதாரம் என எதுவாக இருந்தாலும், இந்த அறக்கட்டளை ஒவ்வொரு திசையிலும் சிறந்த பணிகளைச் செய்துள்ளது” என்று கூறிய பிரதமர் மோடி, அம்ரேலியில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் மருத்துவமனை சேவை உணர்வுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக மாறும் என்றும், அம்ரேலி உள்ளிட்ட செளராஷ்டிராவின் பெரும் பகுதிக்கு இது பெரிதும் பயனளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
புற்றுநோய் போன்ற தீவிர நோய்க்கு சிகிச்சை அளிப்பது எந்தவொரு நபருக்கும், குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், புற்றுநோய் சிகிச்சையில் எந்த நோயாளியும் சிரமங்களை எதிர்கொள்ளக் கூடாது என்பதை உறுதி செய்ய அரசு முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார். இந்தச் சிந்தனையுடன், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் சுமார் 30 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், 10 புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளில், சுகாதாரத் துறையில், குஜராத் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும், அது இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ மையமாக மாறியுள்ளது என்றும் பிரதமர் கூறினார். 2002-ம் ஆண்டு வரை குஜராத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன என்றும், இன்று அந்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளாத பாஜக தலைவர் ஜே.பி.நட்டா!
ஆயுஷ்மான் பாரத் திட்டம் புற்றுநோயாளிகள் உட்பட 6 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சிகிச்சையளிக்கவும் ஒரு லட்சம் கோடி ரூபாயை சேமிக்கவும் உதவியுள்ளது என்றும் பிரதமர் கூறினார். 80 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கும் 10,000 மக்கள் மருந்தக மையங்களைத் திறந்திருப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 25,000 ஆக உயர்த்துவது குறித்தும் பிரதமர் தெரிவித்தார். ரூ.30,000 கோடி செலவு செய்து நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். “புற்றுநோய் மருந்துகளின் விலையையும் அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது, இது பல புற்றுநோயாளிகளுக்கு பயனளித்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
வசதி படைத்தவர்கள் திருமண வைபவங்களை நாட்டிலேயே நடத்த வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்கு செல்லும் திருமணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "மேட் இன் இந்தியா, வெட் இன் இந்தியா" என்று கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.