ஹரியானா மாநிலம், காண்டாவாலி கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர், மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ரெயிலில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடாமல் புறக்கணித்தனர். கையில் கருப்பு பட்டை அணிந்து தொழுகை நடத்தி, தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.

ரம்ஜான் பயணம்

ஹரியானா மாநிலம், பாலாப்கார்க் மாவட்டம், காண்டாவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூனைத்(வயது 19). இவரின் சகோதரர்கள் மோசின், ஹசிம்(20), மொயின்(17). இவர்கள் அனைவரும் ரம்ஜான்  பண்டிகைக்காக கடந்த வியாழக்கிழமை டெல்லி ஜூம்மா மசூதி பகுதியில் பொருட்கள், உடைகள், உணவுகள் வாங்கிட்டு ஊர் திரும்பினர்.  ஹரியானா வழியாகச் செல்லும் மதுரா ரெயிலில் பாலாப்கார்க் செல்ல ஏறினர்.

கத்திகக்குத்து

ரெயில்  15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் முஸ்லிம் இளைஞர்கள் அணிந்திருந்த உடை குறித்தும், முகத்தில் இருந்த தாடி, தலையில் அணிந்திருந்த குல்லா ஆகியவை குறித்து மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வந்ததாக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் அந்த கும்பல், பாலாபார்க் ரெயில் நிலையம் வந்தபோது ஜூனைத் என்ற இளைஞரை கத்தியால் குத்திவிட்டு, உடன் வந்தவர்ளை தாக்கிவிட்டு தப்பினர்.

சோகத்தில் கிராமம்

இந்த சம்பவத்தால் கண்டாவாலி கிராமமே ரம்ஜான் பண்டிகையான நேற்று சோகத்தில் மூழ்கியது. கிராமத்தில் உள்ள முஸ்லிம் மக்கள்யாவரும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடாமல், கையில் கருப்பு பட்டை அணிந்து தொழுகை மட்டுமே நடத்தினர்.

நீதி வேண்டும்

இது குறித்து கொலை செய்யப்ப்டட ஜூனைத்தின் தந்தை ஜலாலுதீனைச்(வயது 55) சுற்றியும், வீட்டுக்கு அருகேயும் ஏராளமான முஸ்லிம்மக்கள் அமர்ந்துள்ளனர். அப்போது நிருபர்களிடம் ஜலாலுதீன்  கூறுகையில், “ எனக்கு நேர்ந்த கொடுமைபோல், ராம்ஜான்பண்டிகை சோகம் போல் யாருக்கும் வரக்கூடாது. காலையில் தொழுகை மட்டுமே நடத்தினோம், ரம்ஜான் கொண்டாட்டம் இல்லை.

ரெரியிலில் இருக்கைக்காக சண்டை போட்டார்கள் என்று கூறுவது தவறு. முழுக்க முழுக்க மததுவேஷத்துடன் என் மகன்களை தாக்கியுள்ளனர். என் மகன் சாவுக்கு காரமாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுவரை ஹரியானா அரசு சார்பில் ஒரு சிறிய அதிகாரி கூட எங்களை வந்து சந்திக்கவில்லை. ’’ என்றார்.

தாடி, குல்லாவை பிடித்து இழுத்தனர்

ஜூனைத்தின் சகோதரர் ஹசிம் கூறுகையில், “ எனது சகோதரர் ஜூனைத்தைபட்டப்பகலில் குத்திக்கொன்றனர். ஒக்லா ரெயில்நிலையத்தல் ஏறிய 20க்கும் மேற்பட்ட கும்பல் என் தம்பியை பிடித்து கீழே தள்ளினர். ஏன் தள்ளுகிறீர்கள் எனக் கேட்டபோது, தலையில் அணிந்திருந்த குல்லாவை காரணம் காட்டினர். நீங்கள் முஸ்லிம்கள், தேசவிரோதிகள், பாகிஸ்தானிகள், மாட்டிறைச்சி தின்பவர்கள் எனக்கூறி நாங்கள் அணிந்திருந்த குல்லாவையும், தாடியைப் பிடித்தும் இழுத்தனர்’’ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் கொல்லப்படுவது எப்போது நிறுத்தப்படும்?

இந்நிலையில், கண்டாவாலி கிராமத்தைச் சேர்ந்த சாகீல் என்ற பெண் கூறுகையில், “ ஜூனைத் கொல்லப்பட்டதால், இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை நாங்கள் கொண்டாடவில்லை. கையில் கருப்புபட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவிக்கிறோம். எப்போது இந்த வேறுபாடு நிறுத்தப்படும்?. இந்த சம்பவத்துக்கு பின் அரசு இழப்பீடு கொடுக்கும். மக்களும் இதை மறந்துவிடுவார்கள். ஆனால், கேள்வி என்பது, எப்போதுஇது போல் முஸ்லிகளை கொல்வது நிறுத்தப்படும்?’’ எனத் தெரிவித்தார்.