MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • காதல் கணவரை கொலை செய்து நாடகமாடிய ஜோதி! விசாரணையில் குடும்பத்துடன் சேர்ந்து கொன்றது அம்பலம்! என்ன காரணம்?

காதல் கணவரை கொலை செய்து நாடகமாடிய ஜோதி! விசாரணையில் குடும்பத்துடன் சேர்ந்து கொன்றது அம்பலம்! என்ன காரணம்?

உத்தரபிரதேசத்தில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 03 2026, 05:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காதல் திருமணம்
Image Credit : stockPhoto

காதல் திருமணம்

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பவுபோராவைச் சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் (33). இவர் மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜிதேந்திர குமார் ஜோதியை 9 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி ஜோதி அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார்.

24
காவல் நிலையத்தில் புகார்
Image Credit : our own

காவல் நிலையத்தில் புகார்

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி ஜிதேந்திர குமார் திடீரென வீட்டில் தூக்கு போட்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதுதொடர்பான மனைவி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜிதேந்திர குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தனது சகோதரர் சாவில் மர்மம் இருப்பதாக அஜய் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Related Articles

Related image1
அரசு ஊழியர்களின் பியூசை பிடுங்கிய அரசு..! சொத்து விவரங்களை வழங்காத ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்
Related image2
10-ம் வகுப்பில் 25% பாடத்திட்டம் குறைக்கப்படும்.. அரசு அறிவிப்பு.. குஷியில் துள்ளிக் குதிக்கும் மாணவர்கள்!
34
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி
Image Credit : Asianet News

பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஜிதேந்திர குமார் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அடையாளங்கள் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஜோதியிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தது மட்டுமல்லாமல் தடுமாறியுள்ளார்.

44
ஜோதியின் குடும்பம் கைது
Image Credit : X

ஜோதியின் குடும்பம் கைது

பின்னர் ஜிதேந்திர குமாரை ஜோதி அவரது பெற்றோர், சகோதரர் ஆகியோர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதும், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியதும் தெரிய வந்தது. அதிகளவில் பணத்தை சூதாட்டத்தில் இழந்ததால் ஜிதேந்திர குமாருக்கும் ஜோதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் நான்கு பேரும் சேர்ந்து ஜிதேந்திர குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் கொலையை மறைப்பதற்காக உடலை தூக்கில் கட்டி தொங்கவிட்டு ஜிதேந்திர குமார் தற்கொலை செய்ததாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜோதியின் குடும்பத்தையே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
இந்தியா
கொலை
மனைவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Related Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் பியூசை பிடுங்கிய அரசு..! சொத்து விவரங்களை வழங்காத ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்
Recommended image2
10-ம் வகுப்பில் 25% பாடத்திட்டம் குறைக்கப்படும்.. அரசு அறிவிப்பு.. குஷியில் துள்ளிக் குதிக்கும் மாணவர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved