டேட்டா சென்டரில் திடீர் தீ விபத்து.. முடங்கிய ஜியோ சேவை - இப்போ பிரச்சனை தீர்ந்ததா இல்லையா?
Reliance Jio : இன்று நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சிக்னல் பிரச்சனை குறித்து புகார் அளித்துள்ளனர்.
இந்தியாவில் பிரபலமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான விளங்கி வருகின்றது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ஆனால் இன்று நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இணைப்பு சிக்கல்களைப் பற்றி புகாரளித்துள்ளனர்.
மொபைல் இணைய அணுகல் மற்றும் அடிக்கடி அழைப்பு விடுப்பதில் பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்டனர். மேலும் ஜியோ நிறுவனத்தின் இந்த செயலிழப்பு சில பயனர்களை, மற்றவர்களை விட பெரிய அளவில் அதிகமாகவே பாதித்துள்ளது. குறிப்பாக மும்பையில் தான் ஜியோவின் சேவைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பல பயனர்கள் தெரிவித்தனர்.
ஐபோன் 16 இந்தியாவை விடக் குறைவான விலையில் கிடைக்கும் நாடுகள்!
இணைய செயலிழப்பை குறித்து கண்காணிக்கும் சேவையான "டவுன்டெக்டரின்" கூற்றுப்படி, ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் மொபைல் மற்றும் ஃபைபர் இணைய சேவைகளில் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்பட்டுள்ளது. 68% பயனர்கள் தங்கள் மொபைல் நெட்வொர்க்கில் சிக்கல் ஏற்பட்டதாக புகாரளித்ததாக அதன் தரவு காட்டுகிறது. கூடுதலாக, 37% பயனர்கள் மொபைல் இணையத்தில் சிக்கல்களை எதிர்கொண்டதாக புகார் அளித்துள்ளனர். அதே நேரத்தில் 14% பேர் JioFiber இணைப்பு தொடர்பான சிக்கல் குறித்து புகாரளித்துள்ளனர்.
எங்கு பிரச்சனை ஏற்பட்டது?
தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, ரிலையன்ஸ் ஜியோ டேட்டா சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தே, இன்று செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய அதன் நெட்வொர்க் செயலிழக்க வழிவகுத்தது என்று கூறப்படுகிறது. மேலும் அந்த "தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, சேவையகங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றும் அந்நிறுவனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சிக்கல் சரி செய்யப்பட்டது!
ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தொழில்நுட்ப காரணத்தால் செயலிழப்பு ஏற்பட்டதாகவும், ஆனால் இப்பொது அந்த சிக்கல் தீர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. "இன்று காலை, மும்பையில் உள்ள சில ஜியோ வாடிக்கையாளர்கள் சிறிய தொழில்நுட்ப சிக்கல்களால் தடையற்ற சேவைகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். அவை தீர்க்கப்பட்டுள்ளன, மேலும் ஜியோவின் தடையற்ற சேவைகள் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளன. எங்கள் சந்தாதாரர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று ரிலையன்ஸ் ஜியோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மோடி பிறந்தநாளில் தூய்மை பேரணியை தொடங்கி வைத்த யோகி ஆதித்யநாத்!