மோடி பிறந்தநாளில் தூய்மை பேரணியை தொடங்கி வைத்த யோகி ஆதித்யநாத்!
முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்கிழமை மழைக்கு மத்தியில் ‘ஸ்வச்தா ஹி சேவா’ இயக்கத்தைத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை மழைக்கு மத்தியில் தூய்மைக்கான பதினைந்து நாட்கள் என்ற நோக்கில் ‘ஸ்வச்சதா ஹி சேவா’ இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
பிரதமராக இருக்கும் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு உ.பி. முதலமைச்சர் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூய்மை தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
'ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்' என்ற முழக்கத்தின் சிற்பி என பாஜகவினரால் அழைக்கப்படும் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடுகிறார். இதனையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நிகழ்ச்சில் கலந்துகொண்ட மக்களுக்கு ஒரு துணிப்பையும் மற்றும் 'ஸ்வச்தா ஹி சேவா' டி-சர்ட்டும் யோகியால் வழங்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் பலத்த மழைக்கு மத்தியில் 'பாரத் மா கி ஜெய்', 'வந்தே மாதரம்' என்று முழக்கமிட்டபடி கைகளில் குடைகளுடன் பேரணியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் ரவீந்திர ஜெய்ஸ்வால், மேயர் அசோக் திவாரி, எம்எல்ஏ நீலகண்ட திவாரி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பூனம் மவுரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
யார் இந்த அதிஷி? கெஜ்ரிவாலுக்குப் பின் டெல்லியின் அடுத்த முதல்வராகும் ஆம் ஆத்மி தலைவர்!
வீட்டில் இருந்தே மாதம் ரூ.20,000 சம்பாதிக்கலாம்! போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் இணைவது எப்படி?