ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்.பி.யின் காலை தண்ணீரால் கழுவிய அக்கட்சி தொண்டர் ஒருவர், அந்த நீரை தீர்த்தமாக பருகிய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்.பி.யின் காலை தண்ணீரால் கழுவிய அக்கட்சி தொண்டர் ஒருவர், அந்த நீரை தீர்த்தமாக பருகிய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் நிஷிகாந்த் துபே. அவர் தொகுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு வந்த கட்சி தொண்டர் ஒருவர் நிஷிகாந்த் துபேயின் காலை தண்ணீரால் கழுவி, துடைத்தார். பிறகு அந்த நீரை தீர்த்தமாக குடித்தார். 
இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நிஷிகாந்த், ஜார்கண்டில் விருந்தினர்களை கவுரவிப்பதற்காக அவர்கள் கால்களை கழுவது சாதாரணமாக நடப்பது.

மகாபாரதத்தில் கிருஷ்ணரே சுதாமாவின் காலை கழுவி விட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். தாம் செய்த தவறை மறைப்பதற்காக இதுபோன்று நியாயப்படுத்தி எம்.பி. நிஷிகாந்த் துபே பேசியுள்ளார்.