வெளியானது ஜேஇஇ மெயின் தேர்வு 2023 முடிவுகள்... முடிவுகளை பார்ப்பது எப்படி? விவரம் உள்ளே!!
ஜேஇஇ மெயின் தேர்வு 2023 முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

ஜேஇஇ மெயின் தேர்வு 2023 முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக தேர்வுகள் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு ஜன.24 முதல் பிப்.1 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 14 மொழிகளில் நடைபெற்ற இந்த தேர்வினை சுமார் 8,23,967 பேர் எழுதினர்.
இதையும் படிங்க: அதானி குழுமத்துக்கு ரூ.5,400 கோடி போச்சு! டெண்டரை ரத்து செய்தது உத்தரப் பிரதேச பாஜக அரசு
அதில் 2,56,686 பேர் பெண்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியானது. அதில், முதல் 20 இடங்களை மாண்வர்கள் கைப்பற்றியுள்ளனர். மாணவர்கள் சிலர் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: அதானி மகன், முகேஷ் அம்பானி மகனுக்கு புதிய பதவி: மகாராஷ்டிரா அரசு உத்தரவு
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
- https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்
- அதில், 'Download Score Card of JEE(Main) Session 1_Paper 1 என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்.
- அதில் தேர்வர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் ரகசியக் குறியீட்டு எண் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
- 2023 ஆம் ஆண்டுக்கான ஜனவரி ஜேஇஇ மெயின் தேர்வு தாள் 1-ன் முடிவுகள் திரையில் தோன்றும்.
- ஜேஇஇ மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.