Asianet News TamilAsianet News Tamil

Smallest Wooden Spoon: சோற்றுப் பருக்கையைவிட குட்டியாக மர ஸ்பூன்! இந்திய சிற்பியின் கின்னஸ் சாதனை!

ராஜஸ்தானைச் சேர்ந்த சிற்பி ஒருவர் அரிசியைவிடச் சின்னதாக ஒரு மர ஸ்பூனைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Jaipur artist creates wooden spoon smaller than a grain of rice, creates record
Author
First Published Jan 30, 2023, 9:54 AM IST

ராஜஸ்தானைச் சேர்ந்த சிற்பி ஒருவர் அரிசியைவிடச் சின்னதாக ஒரு மர ஸ்பூனைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிற்பி நவரத்தன் பிரஜாபதி முர்திகார். இவர் உருவாக்கி இருக்கும் மர ஸ்பூன் அரிசியைவிட குட்டியாக இருக்கிறது. ஒரு பருக்கை சோற்றைக்கூட இந்த ஸ்பூனால் எடுக்க முடியாது. அந்த அளவுக்குக் குட்டியூண்டாக வடிவமைத்துள்ளார்.

இந்த குட்டி ஸ்பூன் மூலம் அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக கின்னஸ் சாதனை அமைப்பு ட்விட்டர் வீடியோ ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பிரஜாபதி தயாரித்துள்ள ஸ்பூன் 2 மி.மீ. (0.7 இன்ச்) மட்டுமே நீளம் கொண்டது.

IndiGo: நடுவானில் விமானக் கதவைத் திறக்க முயன்ற பயணி!

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு குட்டி ஸ்பூனை எப்படிச் செய்திருப்பார்? இதை வைத்து என்ன சாப்பிட முடியும்? ஜாலியாக பதிவிட்டு வருகிறார்கள். இதனால் பிரஜாபதியின் குட்டி ஸ்பூன் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Jaipur artist creates wooden spoon smaller than a grain of rice, creates record

மார்பிள் சிலைகளை செய்யும் சிற்பியான பிரஜாபதி இதேபோன்ற மிகச்சிறிய பொருட்களை உருவாக்குவது தனது நீண்டகால விரும்பும் என்று கூறுகிறார். “கின்னஸ் உலக சாதனை கோஹினூர் வைரத்தைப் போன்றது. இந்த சாதனை அங்கீகாரம் எனக்குக் கிடைத்திருப்பது, கிரீடம் அணிவிக்கப்பட்டதை போல உள்ளது” என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

Princess Diana Gown: கண்ணைப் பறிக்கும் இளவரசி டயானாவின் கவுன் ரூ.5 கோடிக்கு ஏலம்!

Follow Us:
Download App:
  • android
  • ios