நாடாளுமன்றத்தை விட எந்த அதிகாரமும் உயர்ந்தது இல்லை என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உச்சநீதிமன்றத்தை மீண்டும் விமர்சித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Jagdeep Dhankhar criticized the Supreme Court: டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த அரசியலமைப்பு விரிவுரைத் தொடரில் உரையாற்றிய துணை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நாடாளுமன்றத்தின் மேலாதிக்கத்தையும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் இறுதி அதிகாரத்தையும் வலியுறுத்தினார். மக்கள் பிரதிநிதிகள் உச்ச அதிகாரத்தை வைத்திருக்கும் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜெகதீப் தன்கர்

டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய ஜெகதீப் தன்கர், ஒரு அரசியலமைப்புச் செயல்பாட்டாளர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உச்ச தேசிய நலனால் வழிநடத்தப்படுகிறது என்று கூறினார். ''நான் உங்களுக்குச் சொல்கிறேன், அரசியலமைப்புச் சட்டம் அதன் சாரத்தை, அதன் மதிப்பை, அரசியலமைப்பின் முகவுரையில் அமிர்தத்தை உள்ளடக்கியது. நாங்கள் இந்திய மக்கள், உச்ச அதிகாரம் அவர்களிடம் உள்ளது. இந்திய மக்களுக்கு மேல் யாரும் இல்லை என்று அரசியலைப்பு சட்டம் சொல்கிறது'' என்றார்.

நாடாளுமன்றமே உயர்ந்தது

தொடர்ந்து பேசிய ஜெகதீப் தன்கர், ''நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியலமைப்பு உள்ளடக்கத்தின் இறுதி எஜமானர்கள். அரசியலமைப்பு மக்களுக்கானது. மேலும் அதைப் பாதுகாப்பதற்கான அதன் களஞ்சியம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் களஞ்சியமாகும். அரசியலமைப்பில் நாடாளுமன்றத்துக்கு மேலே எந்த அதிகாரமும் இல்லை. நாடாளுமன்றமே உயர்ந்தது'' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய துணை குடியரசுத் தலைவர், ''நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரைப் போலவே நாடாளுமன்றமும் உயர்ந்தது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மக்களாகிய நம் ஒரு பகுதி ஜனநாயகத்தில் ஒரு அணு. அந்த அணுவுக்கு அணு சக்தி உள்ளது. மேலும் அந்த அணுசக்தி தேர்தல்களின் போது பிரதிபலிக்கிறது. அதனால்தான் நாம் ஒரு ஜனநாயக நாடு'' என்று கூறினார்.

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் அதிரடி பேச்சு!!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு கூறிய உச்சநீதிமன்றம், ''ஆளுநருக்கு என்று எந்த அதிகாரமும் இல்லை. மாநில அரசு இயற்றும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தான் அவரது வேலை. அந்த மசோதாவை நிறுத்தி வைக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை'' என்று தெரிவித்து இருந்தது. மேலும் மாநில அரசுகளின் மசோதா மீது முடிவெடுப்பது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் சில அறிவுறுத்தல்களை உச்சநீதிமன்றம் வழங்கி இருந்தது.

எதிர்க்கட்சிகள் கண்டனம் 

மேலும் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கும் இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், அது தொடர்பாக மத்திய அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பால் பொங்கியெழுந்த துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், குடியரசுத் தலைவரை கட்டுப்படுத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உள்ளதா? உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? என்று கேள்வி கேள்வி எழுப்பி இருந்தார். உச்சநீதிமன்றத்தை விமர்சித்த ஜெகதீப் தன்கருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் தான் 'நாடாளுமன்றத்தை விட எந்த அதிகாரமும் உயர்ந்தது இல்லை' என்று உச்சநீதிமன்றத்தை ஜெகதீப் தன்கர் மீண்டும் தாக்கியுள்ளார்.

காங்கிரஸ் கண்டனம் 

இதனால் ஜெகதீப் தன்கருக்கு எதிர்க்கட்சிகள் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளன. ''சட்டங்களை இயற்றுவதற்கான முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது. ஆனால் அரசியலமைப்பை விளக்கி முழுமையான நீதியை வழங்க உச்ச நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது. உச்ச‌நீதிமன்றம் கூறிய அனைத்தும் நமது அரசியலமைப்பு மதிப்புகளுடன் ஒத்துப்போகின்றன'' என்று காங்கிரஸ் எம்.பி.யும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார். 

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்; மே 14 இல் பதவியேற்பு