வீடியோ போட்டு கிடைத்த வருமானம் 1 கோடி.. பிரபல யூடியூபர் வீட்டில் IT ரைட் - திட்டமிட்ட சதி என்று கதறல்!
ஷேர் மார்க்கெட் குறித்து பல வீடியோக்களை இவர் "டிரேடிங் ஹப் 3.0" என்ற யூடியூப் சேனல் மூலம் பதிவிட்டு வருகிறார்.

ஒரு ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் போதும் இந்த உலகையே நம் வசப்படுத்தி விடலாம் என்ற அளவிற்கு முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாகியுள்ளது நம் உலகம். இந்நிலையில் பலர் தாங்கள் பார்த்து வந்த வேலைகளை விட்டுவிட்டு, தற்பொழுது யூடியூப் சேனல்கள் துவங்கி அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். வெற்றி என்றால் அது சாதாரண வெற்றி அல்ல, ஒரு சராசரி மனிதன் தனது வாழ்க்கையில் 20 முதல் 25 வருடம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஒரு சில வருடங்களில் இந்த youtube வீடியோக்கள் மூலம் சம்பாதித்து விடுகிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.
அந்த வகையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒரு பிரபல யூடியூபர் வீட்டில் வருமான வரித்துறை போலீசார் ரெய்டு நடத்தியுள்ளனர். இந்த ரைடின்பொழுது அவர் வீட்டில் இருந்து சுமார் 24 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவர் சட்டத்திற்கு விரோதமான முறையில் இந்த பணத்தை சம்பாதித்ததாக கூறப்படும் நிலையில் அதை அவரும், அவரது குடும்பத்தாரும் மறுத்துள்ளனர்.
தஸ்லீம், இவர் உத்தர பிரதேசத்தில் உள்ள பரேலி என்ற இடத்தில் வசிக்கிறார், ஷேர் மார்க்கெட் குறித்து பல வீடியோக்களை இவர் "டிரேடிங் ஹப் 3.0" என்ற யூடியூப் சேனல் மூலம் பதிவிட்டு வருகிறார். இவர் ஒரு வருமான வரி செலுத்தும் நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஸ்லீம், அவருடைய சகோதரர் பெரோஸ் தான் தன்னுடைய யூடியூப் சேனலை பராமரித்து வருவதாக கூறியுள்ளார். இதுவரை தான் youtube மூலம் நியாயப்படி சம்பாதித்த 1.2 கோடி ரூபாய்க்கு நான்கு லட்சம் ரூபாய் வரி நியாயமாக செலுத்தி விட்டதாகவும்.
இது நேர்மையான முறையில் நடத்தப்படும் யூடியூப் சேனல் என்றும், இதன் மூலம் வரும் வருமானமும் சரியாக அரசுக்கு கணக்கு காட்டப்படுகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த வருமான வரி சோதனை திட்டமிட்ட சதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.