நாட்டின் மனசாட்சியில் ஏற்பட்ட காயம்: மணிப்பூர் நிலவரம் குறித்து சோனியா காந்தி வேதனை
50 நாட்களுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்வது குறித்து பேசியுள்ள சோனியா காந்தி, ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலத்தில் இருந்து வெளியேறியது பற்றி கவலை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை வெளியிட்டிருக்கும் வீடியோவில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநில மக்களின் வாழ்க்கையைப் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ள முன்னெப்போதும் இல்லாத வன்முறைச் சம்பவங்கள் நாட்டின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தங்கள் வாழ்நாளில் கட்டியெழுப்பிய அனைத்தையும் விட்டுவிட்டு, வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
மும்பை ஐஐடிக்கு ரூ.315 கோடி நன்கொடை கொடுத்த 'இன்போசிஸ்' நந்தன் நிலேகனி!
வீடியோவில் பேசும் சோனியா காந்தி, "அமைதியாக வாழ்ந்த நமது சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் எதிராளிகளாக மாறுவதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது" என்று சொல்கிறார். மேலும், அனைத்து இனங்கள், மதங்கள் மற்றும் பின்புலங்களைச் சேர்ந்த மக்களை அரவணைத்துச் செல்வதற்கு மணிப்பூரின் வரலாறு சான்றாக விளங்கி வருகிறது என்றும் சோனியா காந்தி குறிப்பிடுகிறார்.
"சகோதரத்துவ உணர்வை வளர்ப்பதற்கு மிகப்பெரிய நம்பிக்கை மற்றும் நல்லெண்ணம் தேவை. வெறுப்பு மற்றும் பிரிவினையின் தீப்பிழம்புகளை விசிறிவிட ஒரு தவறான நடவடிக்கை போதும்" என்று சுட்டிக்காட்டியுள்ள சோனியா காந்தி, மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவர வழிவகுக்குமாறு மணிப்பூர் மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தான் ஹோலி கொண்டாட்டத்துக்குத் தடை! இஸ்லாமிய அடையாளத்தைக் பாதுகாக்க உத்தரவு!
ஒரு தாயாக மக்களின் வலியைப் புரிந்துகொள்வதாகத் தெரிவித்துள்ள சோனியா, வரவிருக்கும் நாட்களில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நீண்ட பயணத்தை மேற்கொள்வோம் என்றும் வலுவுடன் இந்தச் சோதனையிலிருந்து வெளியேறி வருவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "மணிப்பூர் மக்கள் மீது எனக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது. நாம் ஒன்றாகச் செயல்பட்டு இந்தச் சோதனையை வெல்வோம்" என்று சோனியாகாந்தி தனது வீடியோ செய்தியில் குறிப்பிடுகிறார்.
மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் மத்திய, மாநில அரசுகள் தங்கள் கடமையில் இருந்து தவறிவிட்டன் என்றும் கூறிவருகிறது.
மொமைல் ஸ்டோரஜ் தீர்ந்து போச்சா? வாட்ஸ்அப்பில் இதை மட்டும் செய்தால் போதும்! நிறைய மெமரி சேமிக்கலாம்!
கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் மாநிலத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இச்சூழலில் மணிப்பூர் நிலவரம் குறித்து நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி இன்றுவரை ஒரு வார்த்தைகூட கூறவில்லை. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அண்மையில் ஒலிபரப்பான அவரது மன் கீ பாத் வானொலி உரையைப் புறக்கணித்த மணிப்பூர் மக்கள் பிரதமர் பேசத் தொடங்கியதும் ரேடியோ பெட்டிகளை உடைத்தும் எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சில தினங்களுக்கு முன்பு, மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை குறித்து காங்கிரஸ் கட்சி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துமாறு கோரியது. அதன் எதிரொலியாக புதன்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 24ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டின் சாபக்கேடு! விஜய் ரசிகர்களை தெறிக்கவிடும் திருமாவளவன்!