சந்திரனின் சுற்றுப்பாதையை நோக்கி நேரான பாதையில் பயணிக்கும் சந்திரயான்-3 இன்னும் ஐந்து நாட்களில் சந்திரனின் சுற்றுப்பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்கிழமை அதிகாலை சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவுப் பயணத்தில் மற்றொரு முக்கிய கட்டத்தை இஸ்ரோ தாண்டியுள்ளது. டிரான்ஸ்-லூனார் இன்ஜெக்ஷன் (டிஎல்ஐ) எனப்படும் முக்கியத்துவம் வாய்ந்த செயல்முறை வெற்றிகரமாக முடிந்திருக்கிறதுது.

இதன் மூலம் சந்திரயான்-3 இன்னும் ஐந்து நாட்களில் சந்திரனின் சுற்றுப்பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் 2145 கிலோ உந்துவிசை தொகுதி, அதன் மேல் விக்ரம் (லேண்டர்) மற்றும் பிரக்யான் (ரோவர்) ஆகியவை அடங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் தரையிறங்கும் தொகுதி சந்திரனின் சுற்றுப்பாதையை நோக்கி நேரான பாதையில் பயணிக்க உள்ளது.

இதற்கு முன் ஐந்து முறை அளிக்கப்பட்ட உந்துவிசையின் மூலம் சந்திராயன்-3 விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையைக் கடந்திருக்கிறது.

சந்திரயான்-3 விண்கலத்தில் விக்ரம்! சந்திரயான்-2 ல் இல்லாத சிறப்பு அம்சம் என்னென்ன தெரியுமா?

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சந்திரயான் 3 வெண்கலம் ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டது. நிலவில் இதுவரை ஆய்வு செய்யப்படாத தென் துருவப்பகுதியில் விண்கலத்தை மென்மையான தரையிறக்கம் செய்யும் செய்யும் நோக்கில் சந்திரயான்-3 திட்டத்தை மேற்கொண்டிருக்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் விண்கலம் 3வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க முடிந்தது. சந்திரயான்-3 பயணத்தில் மென்மையான தரையிறக்கம் வெற்றி அடைந்தால் நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்.

Chandrayaan 3: நிலவின் தென்துருவத்தில் என்ன இருக்கிறது? ஏன் இஸ்ரோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது?