Asianet News TamilAsianet News Tamil

ISRO 2023:இஸ்ரோவின் SSLV-D2 ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது: வெற்றியாகுமா?

எஸ்எஸ்எல்வி-டி2(SSLV-D2) சிறிய ரக ராக்கெட் மூலம் 3 செயற்கைக் கோள்களை நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோ(ISRO) விண்ணில் செலுத்துகிறது. 

ISRO plans to launch SSLV-D2 on Feb10
Author
First Published Feb 9, 2023, 12:31 PM IST

எஸ்எஸ்எல்வி-டி2(SSLV-D2) சிறிய ரக ராக்கெட் மூலம் 3 செயற்கைக் கோள்களை நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோ(ISRO) விண்ணில் செலுத்துகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்ரோ அனுப்பிய எஸ்எஸ்எல்வி-டி1 சிறிய ரக ராக்கெட் குறித்த இலக்கை அடையாமல் தோல்வி அடைந்தது. அதில்உள்ள குறைபாடுகளை சரி செய்து, 2வது முறையாக 3 செயற்கைக்கோள்களை இந்த முறை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்புகிறது

ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு நிலையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 9.18 மணிக்கு எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

ISRO plans to launch SSLV-D2 on Feb10

3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாயும் எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் 15 நிமிடங்கள் விண்ணில் பயணித்து, 450 கி.மீ நீள்வட்டப் பாதையில் 3 செயற்கைக்கோள்களையும் நிலை நிறுத்தும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் இஓஎஸ்-07(EOS-07), அமெரிக்க நிறுவனமான அன்டாரிஸினஅ ஜானுஸ்-1 மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஆசாதிசாட்-2(AzaadiSAT-2) ஆகிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சால் நாடாளுமன்றத்தில் சிரிப்பலை! பிரதமர் மோடியும் சிரித்து ரசித்தார்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட் விண்ணுக்குஅனுப்பியபோது, அது அதிக சுமை இருந்ததால் குறித்த இடத்தை அடையமுடியாமல் தோல்வி அடைந்தது.

எஸ்எஸ்எல்வி ராக்கெட் சிறியரக ராக்கெட். இதன் செயல்திறன் என்பது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை, பூமியின் குறைவான நீள்வட்ட பாதையில் நிலைநிறுத்துவதாகும். இந்த ராக்கெட் பல்வேறு நிறுவனங்களின் தேவையைப் பொருத்து இந்த ராக்கெட் செலுத்தப்படும்

புவியின் குறைந்ததொலைவு நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் ராக்கெட், குறைந்த அளவுநேரம் பயணம் மேற்கொள்ள இந்த ராக்கெட் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டில் 3 அடுக்கு திட எரிபொருள்இருக்கும்.

இந்தியாவில் விரைவில் நிலநடுக்கமா? துருக்கி பூகம்பத்தைக் கணித்த டச்சு ஆய்வாளர் சொல்வது என்ன?

இஓஎஸ்-07 செயற்கைக்கோள் 156.30 எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு மற்றும் அலைக்கற்றையில் ஈரப்பதம் குறித்து ஆய்வுசெய்ய செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது

அமெரிக்காவின் ஜானுஸ்-1 செயற்கைக்கோள் 10 கிலோ எடை கொண்டது, சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா செயற்கைக்கோள் ஆசாதிசாட்-2 செயற்கைக்கோள் 8.7 கிலோ எடை கொண்டதாகும். நாடுமுழுவதும் 750 மாணவிகள் உழைப்பால் இந்த செயற்கைக்கோள் உருவானது
 

Follow Us:
Download App:
  • android
  • ios