75 அரசு பள்ளியை சேர்ந்த 750 மாணவர்களால் உருவாக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் !!

இஸ்ரோவின் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட், 3 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை சரியாக 9:18 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

Isro launches 3 satellites; including one developed by 750 girl students

புவி கண்காணிப்பிற்காக இஓஎஸ் 7, ஆசாதி சாட் 2 மற்றும் ஜேனஸ் 1 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களை புவிவட்ட சுற்றுப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்தவுள்ளது.  இதில், இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட இஓஎஸ் 7 செயற்கைக்கோள் சுமார் 156 கிலோ எடை கொண்டதாகும்.

ஆசாதி சாட் 2 செயற்கைக் கோளை, 75 பள்ளிகளை சேர்ந்த சுமார் 750 பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். ஜேனஸ் 1 செயற்கைக் கோள் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்ததாகும். இந்த 3 செயற்கைக்கோள்களை, எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் மூலம் 15 நிமிட பயணத்தில் 450 கி.மீ. புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

Isro launches 3 satellites; including one developed by 750 girl students

இதையும் படிங்க..இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன்..! மாணவிகளுக்கு ஸ்கூட்டர்.! திரிபுரா தேர்தல் - இலவசங்களை அள்ளி வீசிய பாஜக !!

இதனிடையே தேசிய மாணவர் படை அமைப்பின் 75 ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடும் வகையில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான பாடலை இந்த ராக்கெட் ஏவும்போது இசைக்கப்பட்டது. ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி-டி1 ராக்கெட் இரண்டாம் கட்ட நிலையில் தோல்வி அடைந்தது.

சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக எஸ்எஸ்எல்வி (SSLV-D2) ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில்  இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இ.ஓ.எஸ்-07', சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் நிறுவனத்தின் 'ஆஸாதிசாட்-2' மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அண்டாரிஸ் நிறுவனத்தின் 'ஜேனஸ்-1', ஆகிய 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள் இந்த ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இதில் ஆஸாதிசாட்-2 எனும்  8.7 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை, 75 பள்ளிகளை சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் பயிலும்  750 மாணவிகள் இணைந்து உருவாக்கி உள்ளனர்.  பல்வேறு மாநிலங்களில் உள்ள 75 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 750 பெண்களைக் கொண்ட குழுவால் சாட்டிலைட் உருவாக்கப்பட்டது. கேரளாவில் உள்ள பள்ளிகளில் கொடுங்கல்லூர் அழிக்கோடு கே.எம்.சீதி பள்ளியும் ஒன்றாகும். இங்கிருந்து 10 குழந்தைகள் இந்த செயற்கைக்கோளில் பங்காற்றி உள்ளனர். இந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இங்கு படிக்கும் குழந்தைகள் வரை அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க..சென்னைவாசிகளே உஷார்.! இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் அபராதம் - அதிரடி உத்தரவு.!!

இதையும் படிங்க..வாரிசை சந்தித்த வாரிசு..! முதலமைச்சர் ஸ்டாலினை திடீரென சந்தித்த ஆதித்யா தாக்கரே - 2024 தேர்தல் முன்னோட்டமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios