இஸ்கான் பசு மாட்டை கசாப்புக் கடைகளுக்கு விற்கிறது: பாஜக எம்.பி. மேகனா காந்தி குற்றச்சாட்டு
'ஹரே ராம் ஹரே கிருஷ்ணா' என்று பாடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அளவுக்கு யாரும் மாடுகளை கசாப்புக் கடைக்காரர்களுக்கு விற்கவில்லை என்கிறார் மேனகா காந்தி.
இஸ்கான் (ISKCON) எனப்படும் சர்வதேச கிருஷ்ணா பக்தி இயக்கம் நாட்டிலேயே மிகப் பெரிய ஏமாற்று நிறுவனமாக உள்ளது எனவும் அது தனது கோசாலைகளில் இருக்கும் மாடுகளை கசாப்புக் கடைகளுக்கு விற்கிறது என்றும் பாஜக எம்பி மேனகா காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான், பாஜக எம்.பி.யின் குற்றச்சாட்டுகளை "ஆதாரமற்றது", "பொய்யானது" என்று கூறி நிராகரித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி, விலங்குகள் நலன் தொடர்பான பிரச்சனைகள் குறித்து அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
பிரபலம் ஆவதற்காக கட்டுக்கதையை ஜோடித்த கேரள ராணுவ வீரர் கைது!
இப்போது இஸ்கான் மீது குற்றம்சாட்டி கருத்து தெரிவித்துள்ள அவர், "இஸ்கான் நாட்டின் மிகப்பெரிய ஏமாற்று நிறுவனம். அது கோசாலைகளை பராமரிக்கிறது. பரந்து விரிந்த நிலங்களை வைத்திருக்கிறது. அரசாங்கத்தின் பலன்களைப் பெறுகிறது" என்று பேசியிருக்கிறார். மேனகா காந்தி இவ்வாறு பேசும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இஸ்கானின் அனந்த்பூர் கோசாலைவுக்குச் சென்றதை அவர் நினைவுகூர்ந்துள்ளார். அங்கு பால் அல்லது கன்றுகளைத் தராத எந்தப் பசுவையும் காணவில்லை என்று கூறும் மேனகா காந்தி, "பால் பண்ணை முழுவதும் பால் கறக்காத மாடே இல்லை. ஒரு கன்றுக்குட்டிகூட இல்லை. எல்லாமே விற்கப்பட்டுவிட்டன என்றுதான் அர்த்தம்" எனச் சாடியுள்ளார்.
"இஸ்கான் தனது மாடுகளையெல்லாம் கசாப்புக் கடைக்காரர்களுக்கு விற்கிறது. அவர்கள் செய்யும் அளவுக்கு வேறு யாரும் இதைச் செய்வதில்லை. மேலும் அவர்கள் கோசாலைகளில் 'ஹரே ராம் ஹரே கிருஷ்ணா' என்று பாடிக்கொண்டே செல்கிறார்கள். தங்கள் வாழ்க்கை முழுவதும் பாலை நம்பியே இருப்பதாகச் சொல்கிறார்கள். யாரும் அவர்கள் அளவுக்கு கால்நடைகளை கசாப்புக் கடைக்காரர்களுக்கு விற்கவில்லை" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வட மாநிலங்களில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
இஸ்கான் மறுப்பு:
குற்றச்சாட்டுகளை நிராகரித்த இஸ்கானின் தேசிய செய்தித் தொடர்பாளர் யுதிஷ்டிர் கோவிந்த தாஸ், இஸ்கான் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பசு மற்றும் காளை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் முன்னணியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். "பசுக்கள் மற்றும் காளைகள் வாழ்நாள் முழுவதும் பராமரிக்கப்படுகின்றன. அவை கசாப்புக் கடைகளுக்கு விற்கப்படவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருக்கும் உலகின் பல பகுதிகளில் பசுக்களைப் பாதுகாப்பதில் இஸ்கான் முன்னோடியாக உள்ளது என்று இஸ்கான் அறிக்கை தெரிவித்துள்ளது. "திருமதி மேனகா காந்தி ஒரு பிரபலமான விலங்கு உரிமை ஆர்வலர். இஸ்கான் நலன் விரும்புபவர். அவரது இந்த அறிக்கைகளால் நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹரே கிருஷ்ணா இயக்கத்துடன் தொடர்புடைய இஸ்கான் நிறுவனம், உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில்களைக் கட்டியுள்ளது. அந்தக் கோயில்களுக்கு பல லட்சம் பக்தர்கள் தினமும் வந்துசெல்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் இஸ்கான் துறவிகளில் ஒருவரான அமோக் லீலா தாஸ் சுவாமி விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹன்சரை விமர்சித்தது சர்ச்சைக்குள்ளானது. அமோக் லீலா தாஸ் உடனடியாக தடை செய்யப்பட்டார். மேலும் அவரது கருத்துகளுக்கு பரிகாரம் தேடவும் இஸ்கான் அறிவுறுத்தியது.
கொரோனா ஊசி போட்ட பின் என்ன ஆச்சு... பீதியான தருணம் பற்றி எலான் மஸ்க் ஓபன் டாக்!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D