1000, 500 ரூபாய் நோட்டை மத்திய அரசு செல்லாதது என அறிவித்து திரும்பப் பெறுவதால், நாட்டில் நிலவி வந்த பணவீக்கம், விலைவாசி உயர்வு குறையும், பொருளாதார வளர்ச்சியில் உயர்வு வரும் எனநிதி அயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

டெல்லியில் பொருளாதார ஆசிரியர் மாநாடு நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்டு நிதி அயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா பேசுகையில், “நாட்டில் உள்ள கருப்பு பணத்தையும், போலி ரூபாய் நோட்டுக்களையும் அழிக்கும் நோக்கில் அரசு 1000, 500 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றது ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாகும். இதன் மூலம் பரிமாற்றங்கள் மின்னனு மயமாகி, வெளிப்படையானால், சுத்தமான பொருளாதாரத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவும்.

சேமிப்பு பலவகையில் நம்மிடம் இருக்கிறது. குறிப்பாக ரொக்கப்பணமாக நாம் சேமித்து வருகிறோம். அது ரூ.1000, ரூ.500 நோட்டுகளாக வீட்டில் வைத்திருந்தால், அது வங்கியில் டெபாசிட் ஆகும். இதன் மூலம் வங்கியில் டெபாசிட்களின் அளவு அதிகரிக்கும்.

நாட்டில் உள்ள கருப்பு பணம், மற்றும் போலி ரூபாய் நோட்டுக்கறை நீக்கும் நடவடிக்கையில், பண அளிப்பில், புழக்கத்தில் சிறிய பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். ஏனென்றால், சந்தையில், மக்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வரும்போது, பணப்புழக்கம் முடங்கும், பணப்பரிமாற்றங்கள் முடங்கத்தான் செய்யும்.

அதேசமயம், கருப்பு பணம், போலிரூபாய் நோட்டுக்கள் சந்தையில் இருந்து வெளியேறும்போது, பணத்தின் சப்ளை சில அளவுகள் குறையும். சந்தையில் பணவீக்கம் குறைந்து, பொருட்களின் விலை குறையும் '' எனத் தெரிவித்தார்.