அன்று ஔரங்கசீப் தோற்றார்... இன்று மோடி வெற்றி கண்டார்! சாமவேதத்தை மொழிபெயர்த்த இக்பால் துரானி நெகிழ்ச்சி!
6 வருடங்கள் திரைப்பட பணிகளில் இருந்து விலகி, சாமவேதத்தை மொழிபெயர்த்த இயக்குனர் இக்பால் துரானி... இந்த மொழிபெயர்ப்பு குறித்தும், அதற்காக எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் இக்பால் துரானி... பீகாரைச் சேர்ந்தவர். 'கால் சக்ரா' என்கிற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் 1988 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான இவர், இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளதோடு, சில வெற்றிப்படங்களை தயாரித்தும் உள்ளார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு 'ஹம் தும் துஷ்மன் துஷ்மன்' என்கிற படம் வெளியானது.
இதை தொடர்ந்து, முழுக்க முழுக்க தன்னுடைய திரைப்பட பணிகளை ஒதுக்கி விட்டு, பழமையான இந்திய வேதமான சாமவேதம் பற்றிய புத்தகத்தை ஹிந்தி மற்றும் உறுதி மொழிகளிலில் மொழிபெயர்க்கும் பணியை மேற்கொண்டார். இந்த புத்தகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட நிலையில், இந்த புத்தம் எழுதும் போது எதிர்கொண்ட சவால்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியுள்ளதாவது, திரைப்படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டு சாமவேதத்தை மொழிபெயர்த்து வந்ததால், கடந்த 6 வருடங்களுக்கு மேலாக “எனக்கு எவ்வித வருமானமும் இல்லை. அனைத்தையும் சமாளித்து, மும்பையில் என் குடும்பத்தோடு வசித்து வந்தேன். நான் நினைத்தால் இந்த 6 வருடங்களில் பல கோடி சம்பாதித்திருக்கலாம், அது மிகவும் எளிமையான விஷயம், ஆனால் இந்த புத்தகத்தை மொழிபெயர்ப்பது தான் எனக்கு மிகவும் முக்கியமானதாக தோன்றியது.
காரணம், சாமவேதம் என்பது கிமு 1500 மற்றும் 1200 காலகட்டத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல்களின் புத்தகம். ஒரே நேரத்தில் படங்களிலும், புத்தக மொழிபெயர்ப்பிலும் கவனம் செலுத்த கடினமாக இருந்ததால், முழு நேரம் சினிமாவில் இருந்து விலகி இப்புத்த பணியில் கவனம் செலுத்த முடிவு செய்தேன். எனினும் நான் ஒரு இஸ்லாம் மத்தை சேர்ந்தவன் என்பதாலும், இயற்பியல் மாணவன் என்பதிலும் மொழிபெயர்ப்பு பணியில் சில சவால்களையும் எதிர்கொள்ள நேரிட்டது.
44 வயதில்... அருவி சீரியல் நடிகை லாவண்யாவுக்கு நடந்த திருமணம்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
ஆனால் ஒருவழியாக அனைத்து சவால்களையும் கடந்து, சாமவேதத்தை மொழிபெயர்த்து முடித்தேன். இதனை தலைநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் முகம் பகவத் இந்தி மற்றும் உருது மொழியில் வெளியிட்டார் என கூறி பூரித்தார். தொடர்ந்து பேசிய அவர் 400 ஆண்டுகளுக்கு முன்பே, முகலாய இளவரசர் தாரா ஷிகோவுக்கு, அப்னிஷ்தாஸ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டதாகவும், அவர் வேதங்களை மொழிபெயர்க்க விரும்பியதாகவும், ஆனால் அவரது சகோதரர் ஔரங்கசீப் அவரை ஷாஜகானின் அரியணையில் ஏறிய வாரிசுப் போரில் கொல்லப்பட்டதால் அது முடியாமல் போனது. ஆனால் இன்று, பிரதமர் மோடியின் ஆட்சியில், அவரது கனவை நான் நிறைவேற்றிவிட்டேன். ஔரங்கசீப் தோற்று மோடி வெற்றி பெற்றார்” என்று இக்பால் துரானி நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
மேலும் இப்புத்தகம் பாடத்திட்டங்களில் இடம்பெற வேண்டும் என்றும், இதன் மூலம் குழந்தைகள் எது சரி எது தவறு என்பதை அறிய முடியும்" என்றார். அதே போல் சாமவேதம் புத்தகமாக மட்டும் இன்றி, விரைவில் அதன் டிஜிட்டல் பதிப்பில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், யூடியூப் போன்ற இணைய ஊடகங்களிலும் பதிவேற்றப்படும். எனவே சாமவேதம் பற்றி அனைவருக்கும் அவர்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என இக்பால் துரானி தெரிவித்துள்ளார்.
இன்று எங்கும் வெறுப்பு தான் கற்பிக்கப்படுகிறது, வரலாறுகள் அழிக்கப்பட்டு வருகிறது. தேசிய ஒற்றுமைக்காக அன்பின் கீதத்தை எழுத முடிவு செய்தேன். வேதம் மூல நூல் என்பதை அனைவரும் அறிந்து படிக்க வேண்டும். நான் யாரையும் குறிவைக்க விரும்பவில்லை என்று கூறிய அவர், தவறான எண்ணங்களை போக்க நமது பழங்கால அறிவை அனைவரும் அறிந்து படிக்க வேண்டும் என்பதை அனைத்து மக்களுக்கும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் எப்போதும் நம்மை நோக்கி விரல்களை நீட்டுவதில்லை, மற்றவர்களை நோக்கி மட்டுமே விரல்களை நீட்டுகிறோம்.என்கிற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
தன்னுடைய வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கிய இக்பால் துரானி, “நாம் (மனிதர்கள்) யாருடனும் இல்லை. நாம் வேதங்களுடன் இருக்கிறோம், வேதங்களுடன் இருப்பவர் என்னுடன் இருக்கிறார், என்னுடன் இருக்கும் (ஏபிஜே அப்துல்) கலாம் அன்பின் கலாம், நான் அவருடன் இருக்கிறேன். நான் மதத்தைப் பின்பற்றினேன், ஆனால் நான் மதத்தை விட கர்மாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். “நம்முடைய பிரிவு மதத்தின் அடிப்படையில் அல்ல, செயல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.